Skip to main content
குறிப்பு : இந்தக் கவிதை பிரம்மச்சாரி இளைஞர்களுக்கு மட்டும்






'குடி'யுரிமை






இளைஞனே ,


நேற்று மாலை


மதுவருந்தியதற்க்காக நீ


மனம்வருந்தாதே !


மது குடிப்பதற்கான


முழு உரிமையும் உள்ளவன் நீதான் !




பிறந்தவூர் என்பது உனக்கு


மறந்தவூர் ஆகிவிட்டது !




தொலைவில் உள்ளதாலேயே , அது


தொலைந்த ஊர் ஆகிவிட்டது !




சொந்த ஊர் விட்டு ,


பிழைப்புத் தேடி


வந்த ஊர் என்பது


வாழ்க்கையில் மிகவும்


நொந்த ஊர் ஆகிவிட்டது !




பேயைப் போல உழைத்தாலும்


நாயைப் போல நடத்தும்


பணியிடம் என்னும் பிணியிடம் !




காதலிக்க ஆளின்றி


பேதலிக்கும் மனது !




சுகமான


மதியத் தூக்கத்தின் பின்வரும்


சூனிய மாலைகள் !




கடைகளில்


கிடைத்ததைத் தின்று


பேதி வந்து


பாதி செத்தாலும்


நாதியில்லாத நிலை !




வாசலில் அமர்ந்து


வீதியைப் பார்த்து


விரக்தியை வளர்த்து


நீ கழித்த விடுமுறைகள்


எத்தனை எத்தனை ?




பெருங்கூட்டப் புகைவண்டியில்


ஒற்றைக் காலில் நின்றுகொண்டு


இரவெல்லாம் அயராத இமையோடு ,


தோளைவிட்டுப் பெயராத சுமையோடு ,


பயணம் முழுக்க சயனம் இன்றி ,


பாதிஇறந்து பிறந்தவூர் வந்து


பயணக்களைப்பில் பகலெல்லாம்


படுத்துறங்கி படுத்துறங்கி


நீ தொலைத்த பண்டிகை நாட்கள்


எத்தனை எத்தனை ?




வாலிபத்தின் பசிக்கு


காதல் கனி கிடைக்க


வசதியாய் இருக்க வேண்டும் , அல்லது


வனப்பாயிருக்க வேண்டும் !


அது ,


' இருப்பவர்களுக்கு ' மட்டுமேயான


இளமையின் இன்பவிளையாட்டு !


இதுபோன்ற விளையாட்டில்


ஈடுபடத் தகுதியற்ற


உன்னைப் போன்றவர்கள்தான்


உண்மையிலேயே ,


குடிப்பதற்கான


'குடி' யுரிமை பெற்றவர்கள் !




இரவுப்பணி முடித்து ,


பார் மறந்து பாயில் படுத்துறங்க


'பார் ' தேடி நீ போவதொன்றும்


போர் குற்றம் ஆகாதடா !




உனக்கு ,


நயந்து பேச நங்கை இல்லை !


மயங்கிப் பேச மங்கை இல்லை !


கொஞ்சிப் பேச வஞ்சி இல்லை !


சேவை செய்ய பாவை இல்லை !


மாதின் போதை மறுக்கப்பட்ட உனக்கு


மதுவின் போதை கொள்ள


மறுப்பேதும் மண்பதையில் இல்லை !


மனம் போல நீ மதுவருந்து !


இளமைக்கு அது , புதுவிருந்து !




இளைஞனே ,


உனக்கொரு


காதலி கிடைக்காததுதான்


உன் வாலிபத்திற்கு வந்த


உண்மையான இழுக்கு !


குடித்துப்பார் மறைந்துபோகும்


புறவுலகின் ,


தொன்மையான அழுக்கு !




இறுதியாக ஒன்று ,




மனதிற்கினிய மனைவியும் ,


பேர்சொல்லப் பிள்ளையும்


இவ்வாறாக ,


குதூகலித்துக் கொண்டாட


ஒரு குடும்பம்


உனக்கென்று வாய்த்துவிட்டால்


குடிப்பதற்கான முழு உரிமையும்


பகிங்கரமாக உன்னிடமிருந்து


பறிக்கப்படுகிறது என்பதைமட்டும்


புத்தியில் இருத்திக்கொள் !!!








பின்குறிப்பு : பார் , மண்பதை - உலகம் , தொன்மை - பழமை , சயனம் - உறக்கம் .


Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...