Skip to main content
இப்படியும் இருங்களேன் ...........




அந்த காலை நேரத் தேநீர்


சுவையாக இருந்தால்


ரசித்துக் குடியுங்களேன் !


அதன் பிறகு அன்று


'தினசரி ' வரவில்லையென்ற எரிச்சலை


துணைவியிடம் காட்ட மாட்டீர்கள் !




விட்டுப் போன பேருந்தை


விரட்டாமல் விட்டுத்தான் பாருங்களேன் !


குறைந்தபட்சம் அன்றைய தினம்


உங்கள் பணப்பை பத்திரமாயிருக்கலாம் !




தேர்வில் தோற்ற உங்கள் மகனைத்


திட்டாமல் தேற்றுங்களேன் !


அடுத்த தேர்வில் அதிசயமாய் அவன்


அற்புத மதிப்பெண்கள் பெறலாம் !




கையேந்தி நிற்கும்


அந்தப் பிச்சைக்காரிக்கு


இருப்பதிலிருந்து


இயன்றதைக் கொடுங்களேன் !


நிகழவிருக்கும் நஷ்டமொன்று


அதனால் தடுக்கப்படலாம் !




உங்களை நோக்கி


துப்பாக்கியை நீட்டும்


உங்கள் எதிரியிடம்


ஒரு புன்னகை புரிந்துதான்


பாருங்களேன் !


அவனது கைகள் அடுத்தநொடியே


அன்பினால் செயலிழந்து போகலாம் !




பேருந்தில்


காலியான அந்த இருக்கையை


நின்றுகொண்டிருக்கும்


நரைக்கிழவிக்கு விட்டுத்தான்


கொடுங்களேன் !


அடுத்த நிறுத்தத்தில் உங்களுக்கு


ஜன்னலோர இருக்கையே


ஜம்மென்று கிடைக்கலாம் !




உங்கள் தலைமையின் தரம்


திருப்தியளிக்கிறதா என்று


உங்கள் ஊழியனிடம் ஒருநாளாவது


கேட்டுப் பாருங்களேன் !


அதன் பிறகு அவன் என்றுமே


உங்களுக்கு உண்மையாயிருக்கலாம் !




ஏதோ சண்டையால்


உங்களோடு பேசாமலிருக்கும்


உங்கள் அலுவலக நண்பனை


ஒரு காபி சாப்பிட


நீங்களாக அழையுங்களேன் !


அதன் பிறகு என்றென்றும்


நீங்கள் நண்பர்களாகவே இருக்கலாம் !




குடித்துக் கழிக்கும்


வாரயிறுதிக் கொண்டாட்டத்தில்


ஈடுபடாமல் தான் இருங்களேன் !


அதனாலேயே


அந்த மாதத்தின் மழை


பொய்க்காமல் பெய்யலாம் !




உலக நன்மையின் பொருட்டு


கணநேரமாவது உங்கள்


கடவுளின் முன்பு


கண்மூடி நில்லுங்களேன் !


அதனால் ,


சீறவிருக்கும் ஒரு சுனாமியும்


சும்மாயிருந்து விடலாம் !!!

Comments

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது