Skip to main content
பரிசு




ஏதோ ஒரு மழைநாளில்


நிழற்குடையை


மழைக்குடையாக்கி ,


நாம் அருகருகே


நின்றிருக்கும் போது


அதிர வைக்கும் இடியோசை கேட்டு


அர்ச்சுனா அர்ச்சுனா வென்று


இருவரும் ஒருசேரச் சொன்னோமே !


நினைவிருக்கிறதா ?




பூங்காவில் ஒருநாள் ,


புணர்ந்து கொண்டிருந்த


இரண்டு சிட்டுக் குருவிகளுக்குத்


தொந்தரவாய் இருக்குமென்று


வேறிடம் போய் அமர்ந்தோமே


நினைவிருக்கிறதா ?




ஏதோ ஒரு திரைப்படத்தில்


நெகிழ்ச்சியான காதல் காட்சி கண்டு


கலங்கிய நம் கண்களைக்


கைக்குட்டையால்


துடைத்துக் கொண்டோமே !


நினைவிருக்கிறதா ?




உனது பிறந்த நாளின் போது


உதட்டு முத்தம் பகிர்ந்து விட்டு


ஒரு வாரம் முழுக்க இருவரும்


காய்ச்சலில் கிடந்தோமே


நினைவிருக்கிறதா ?




தேர்வில் தோற்றேனென்று


நாள் முழுக்க


நூலகத்தில் பழி கிடந்து


நல்ல புத்தகமொன்றத்


தேடிஎடுத்து நீ தந்த போது


அப்புத்தகத்தின் தடிமன் கண்டு


தலையணை என்று தான்


வருணனை செய்ததற்கு


திட்டிக் கொண்டே


தலையில் குட்டினாயே !


நினைவிருக்கிறதா ?




கடற்கரையில் ஒருநாள்


ஒரு பொட்டலம் சுண்டல் வாங்கி


நீ உண்பாயென நானும்


நான் உண்பேன் என நீயும்


வெறுமனே பேசிக்கொண்டே இருந்து


சுண்டல் சீண்டப்படாமலேயே இருப்பதைப்


புறப்படும் போது உணர்ந்து கொண்டு ,


எனக்கு நீயும் உனக்கு நானும்


மாறி மாறி ஊட்டிக்கொண்டோமே !


நினைவிருக்கிறதா ?




ஏதோ ஒரு ஊடலில்


நாள் முழுக்கப் பேசாதிருந்து


பின்பு மனது பொறுக்காமல்


குறுஞ்செய்தியாலே


இரவு முழுவதும்


குசலம் விசாரித்தோமே !


நினைவிருக்கிறதா ?




இருசக்கர வாகனத்தில்


இருவரும் போனபோது ,


வேகத்தடை வரும்போதெல்லாம்


உந்துதடையை நான் போட ,


புத்தகப் பையை நடுவில் வைத்து


என் தோள் மீது தலைசாய்த்து


வழிநெடுக வந்தாயே


நினைவிருக்கிறதா ?




ஒருநாள் என்னைத்


தனியே அழைத்து ,


தந்தை சம்மதித்து விட்டாரென்று


தேம்பி அழுத உன்னைத்


தேற்ற முயன்று தோற்றுப்போய்


நானும் அழ ,


ஆனந்தக் கண்ணீரில் இருவரும்


அமிழ்ந்து போனோமே !


நினைவிருக்கிறதா ?




என்னையே நினைத்து ,


என்னையே காதலித்து ,


என்னையே மணந்த


உத்தமக் காதலியே !


தொடங்கி விட்ட நமது


திருமண உறவில்


உனக்கொரு


உயர்ந்த பரிசெனத் தர


இந்த நினைவுகளைத் தவிர


வேறொன்றுமில்லை என்னிடம் !!!












Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது