Skip to main content

Posts

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
விலை அவளொரு தாசி ! பாவ ஆற்றில் இச்சை மீன்கள் தின்னும் பாசி ! ஆண்கள் மட்டுந்தான் அவளுக்கு ராசி ! அவள் நடையில் எப்போதுமிருக்கும் - ஒரு பீடு ! இன்பம் தருவதில் வானுலக ரம்பை அவளுக்கு, ஈடு ! ஒதுக்குப்புறமானது அவள், வீடு ! அவள் மேனி, ஒரு சிலையை நிகர்க்கும் ! எப்படிப்பட்ட பிரம்மச்சர்யத்தையும் அவள் பார்வை தகர்க்கும் ! எப்படிப்பார்த்தாலும் அவள், அழகி ! போனால் திரும்பிவரலாம் இன்பத்தை அவளிடம் பழகி ! அவளிடம், துன்பம் நடுங்கும் பருந்தைக்கண்ட அரவு போல ! கவலை மறையும் பகலவன் உதித்த இரவு போல ! அவளிடம் சென்றால், அந்நாள் ஆகும் நம் இன்பக்கணக்கில் - ஒரு வரவு போல ! அன்று..................... அவள், குளித்து விட்டு செயற்கையாக வேர்த்திருந்தாள் ! மயக்கும் வித்தைகளை மனதோடு சேர்த்திருந்தாள் ! திறந்த வாசலில் யாரையோ - எதிர் பார்த்திருந்தாள் ! அவன் வந்தான் ! அவன், தோற்றத்தில் முப்பதை முடித்திருந்தான் ! சொல்ல முடியாத சோகத்தை முகம் முழுக்க வடித்திருந்தான் ! அவனைக்கண்டு அவள், சிரித்தாள் ! பார்வையால் அவனை உரித்தாள் ! பெருமூச்சால், அந்த அறையையே எரித்தாள் ! அவன், சட்டென எழுந்தான் கட்டிலிலிருந்து ! எடுத்து விட்டான் ...
சூழல் ! நான், நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன் ! எதையோ வாயில் மென்று கொண்டிருந்தேன் ! போகும் பெண்களையெல்லாம் பார்வையால் தின்று கொண்டிருந்தேன் ! திகைக்காதீர்கள் ! கேலியாய் என்னைப் பற்றி நகைக்காதீர்கள் ! அழகை ரசிப்பதில் அப்படியொன்றும் இல்லை பிழை ! பிறன்மனை நோக்கினும், புயலடித்தாவது பெய்யும் மழை ! நான், வெந்ததைத் தின்று விதிக்குக் காத்திருக்கும் சாமானியன்தான் ! ரோமில் வாழ்ந்தால் ரோமானியன்தான் ! ஆகவே, அப்படித்தான் ! சங்கதி அதுவல்ல ! அந்த நாய்க்குட்டிகள் ! எங்கிருந்தோ அவை ஓடிவந்தன ! நம்பிக்கையோடு நிறுத்தத்தை, நாடிவந்தன ! துள்ளல் இசையை பிஞ்சுக் கால்களால் பாடிவந்தன ! நாய் கண்டு சிலர், புன்னகை பூத்தார்கள் ! வேறு சிலர், பொறுமை நீத்தார்கள் ! இன்னும் சிலர், அமைதி காத்தார்கள் ! ஒரு நாயின் நிறம் காவி ! ஓடியோடிக் குதித்தது - அது தாவி ! இன்னொரு நாய்க்கு, கண்கள் மட்டும் பச்சை ! கீழே உருண்டு புரள்வதில் அதற்கு அப்படியொரு இச்சை ! மற்றொரு நாய்க்கு, ஆடிக்கொண்டேயிருந்தது வால் ! நிற்கவில்லை அதற்குத் தரையினில் கால் ! இன்னுமொரு நாய் நிற்போரின் காலில் போய் ஈசியது ! அவர்களோடு, அது ஏதோ பேசியது ! நான், அக்காட்...
பிச்சைக்காரன் அவன், கந்தலான கச்சைக்காரன் ! சோற்றின் மீது இச்சைக்காரன் ! சுருங்கச் சொன்னால் பிச்சைக்காரன் ! அவன், ஒவ்வொரு வேளையும் உணவுக்காக வெம்புகிறான் ! எப்படியும் மகேசன் படியளப்பானென்று நம்புகிறான் ! அவனுக்கு, வாழ்வென்பது காற்றிலாடும் ஊசல்தான் ! வயிற்றுக்கும் அவனுக்கும் அனுதினமும் பூசல்தான் ! அவன், வசிப்பிடம் ஒரு தேநீர்க்கடை வாசல்தான் ! அவன், ஒரு நாளும் குளித்ததில்லை ! சோறுண்ண யாரும் அவனை விளித்ததில்லை ! வயிறார அவனும் உண்டு களித்ததில்லை !. உடம்பில் இல்லை முடம் ! இன்னும் இருக்கிறது திடம் ! ஆனாலும், உழைப்பு கூடாதென்று அவனுக்கு ஒரு அடம் ! தொடக்கத்தில் அவனும், காண்போரிடமெல்லாம் ஒரு வேலையை இரந்து பார்த்தான் ! பரிதாபத்தை பக்குவமாய்க் கரந்து பார்த்தான் ! கண்ணீரை கணக்கில்லாமல் சுரந்து பார்த்தான் ! ஒன்றும் நடக்கவில்லை ! அதிர்ஷ்ட தேவதை, அவனைக் கடக்கவில்லை ! பொங்கியெழுந்த பிச்சை வேட்கையை அவனும் பெரிதாய் அடக்கவில்லை ! உடனே ஏந்தினான் கையை ! ஏதோ நிரப்பினான் பையை ! ஓரளவு வளர்த்தான் மெய்யை !. எதற்குக் கிளற வேண்டும் அதையெல்லாம் ! தேவையில்லை நடந்து முடிந்த கதையெல்லாம் ! அது ஒரு பகல் ! ...
இன்னும் விடியவில்லை ! உறக்கம் கலையவில்லை ! இன்னும் கொஞ்சம் உறங்குவோம் ! விடிந்துவிட்டது ! உறக்கம் கலையவில்லை ! இன்னும் கொஞ்சம் உறங்குவோம் ! உறக்கம், கலைந்து விட்டது  ! யாராவது எழுப்பட்டும் ! இன்னும் கொஞ்சம் உறங்குவோம் ! எழுப்பியும் விட்டார்கள் ! பக்கத்தில் இருப்பவன் எழட்டுமே ! இன்னும் கொஞ்சம் உறங்குவோம் ! ================================================= நாய் குரைத்தது ! நாய்கள் குரைத்தன ! மனிதன் குரைத்தான் ! மனிதர்கள், வேடிக்கை பார்த்தனர் ! ================================================ நீ சுதந்திரமானவன்  ! தேர்தெடுக்க முழு உரிமை உள்ளவன் ! ஜனநாயகத்தின் பிரதிநிதி ! சொல் ! தூக்கா ? விஷமா ? கழுமரமா ? மலையுச்சியா  ? ================================================= எல்லா நிர்பந்தமும் பழக்கமாகி விடுவதில்லை ! எல்லா பழக்கமும் நிர்பந்தத்தில் இருந்து வருவதில்லை ! ================================================== பெஞ்சில் தலைசாய்க்கிறான் ஒரு மாணவன் ! வடியத்தொடங்குகிறது உறக்கம் ! ================================================== மறுபடியும்  ஒரு சந்தர்ப்பத்தில் மறுபடியும் ...
அகில உலக காதலன்களுக்கு இக்கவிதை அர்ப்பணம் அன்பே, சாகசங்களால் உன்னை வியக்க வைக்க என்னால் முடியாது ! அபூர்வப் பரிசுதந்து ஆச்சர்யப்படுத்த என்னால் முடியாது ! சுண்டுவிரல் படாமல் கண்ணியமாய்க் காதலிக்க என்னால் முடியாது ! பிற ஆண்களுடன்  நீ பழகுவதை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள என்னால் முடியாது ! உன் விரல் நகங்களுக்கும் கவிதை பாட என்னால் முடியாது ! சொடக்குப் போட்டு சொர்க்கத்தை வரவழைக்க என்னால் முடியாது ! எப்போதும் உன்னைச் சிரிக்க வைக்க என்னால் முடியாது ! ஒரே பாடலில் பணக்காரனாக என்னால் முடியாது ! நுனி நாக்கில் ஆங்கிலம் பேச என்னால் முடியாது ! நீ வாசிக்கும் புத்தகங்களின் ரசிகனாக என்னால் முடியாது ! ஆனால் ...... உன் தந்தைக்கு ஒரு ஹாய் சொல்ல என்னால் முடியும் ! என் அம்மாவை உன் தோழியாக்க என்னால் முடியும் ! நம் காதலின் முக்கிய தினங்களில் உனக்கொரு வாழ்த்துக்கூற என்னால் முடியும் ! கொஞ்சம் கொஞ்சமாய்  ராமனாய் மாற என்னால் முடியும் ! சிறிது சிறிதாய் மதுவை மறக்க என்னால் முடியும் ! ஒரு நாளைக்கு ஒரு சிகெரெட் கண்டிப்பாய் முடியும் ! உன் தாமத வருகைக்கு புன்னகை புரிய என்னால் முடியும் ! நம் எல்லா சண்...
குப்பா .............. குடித்து விட்டு தெருவில் கிடக்கும் குப்பா ! நினைவிருக்கிறதா நீ மூன்று பிள்ளைகளுக்கு அப்பா ! அவிழ்ந்து கிடக்கிறது உன் வேட்டி ! இன்னுமா எடுக்கிறாய் உறக்கத்தைப் பேட்டி ? புலர்ந்து விட்டது காலை ! நிரம்பி விட்டது சாலை ! இன்னும் உனக்கு புழுதியில்  என்ன வேலை ? குப்பா .......... உன் தினப்படி சங்கதியென்ன ? உழைத்தே உன் முதுகை நீ ஓடிக்கிறாய் ! காசு கேட்கும் மனைவியை அடிக்கிறாய் ! மாலை வந்ததும் குடிக்கிறாய் ! இப்படியே ஒவ்வொரு நாளையும் முடிக்கிறாய் ! குடி எனும் கூர்வாளால் உன் குடும்பத்தோரணம் கிழிகிறது ! குடித்துக் குடித்தே உன் உடம்பு கெட்டு அழிகிறது ! உன் பொழுதெல்லாம் இப்படியே நாளும் கழிகிறது ! இன்னும் காயவில்லை உன் வியர்வையின் திவலை ! உனக்கென்ன அப்படியொரு கவலை ? இடிக்கத்தான் வேண்டுமா உரலில் இட்டு அவலை ? குப்பா ........... நீ கட்டியிருக்கிறாய் ஒருத்திக்குத் தாலி ! உன் வாழ்வுப்பயிருக்கு அதுதானே வேலி ! இப்படியே குடித்தால் வெகு விரைவில் உன் ஆரோக்கியம் காலி ! போதை தருவதில் மனைவியைத் தவிர மற்றதெல்லாம் போலி ! குப்பா ......... உழைப்பைக் காரணங்காட்டி இங்கே நீ குடித்தால் .......