Skip to main content
ரயில் சினேகிதி 





சட்டென்று
எனக்குள்
சகலமும்
வெளிச்சமாகி
விடுகின்றன,
எதற்கோ புன்னகைத்தபடி
எதிரே வந்தமர்ந்த
அவளைப் பார்த்ததும் !

கோழிக்குஞ்சை
உள்ளங்கையில்
பொத்திக் கொண்டால்
எப்படியிருக்குமோ
அப்படியிருக்கிறது
என் காதுகளுக்கு
யாருடனோ பேசியபடி
அவள் சிரிப்பது !

வேடிக்கை பார்த்தபடி
பூ விரல்களால்
அவள் கழுத்தை
அவளே
வருடிக் கொள்கிறாள் !
இங்கே எனக்கு
சொக்குகிறது !

எப்படியும்
நிமிர்ந்து என்னைப்
பார்த்து விடுவாள்
என்ற நம்பிக்கையில் தான்
எழுந்து போய்
காசு போடுகிறேன்
அந்த
குருட்டுப் பிச்சைக்காரனுக்கு !

இளஞ்சிவப்பு
நெயில் பாசிஷ்
தடவிய
அவள் பாதங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கறேன்,
சட்டென்று
கதை பேச
ஆரம்பிக்கின்றன
அந்தப் பாதங்கள்
என்னோடு !

நீர் குடிப்பதற்காக
அந்த வாட்டர் பாட்டிலின்
மூடியை
மென்மையாக
மிக மென்மையாக
அவள் திருகுகிறாள்,
தேவராகம்
கேட்டது போல
இன்பமாக அதிர்கிறது
என் பின்னங்கழுத்து !

பற்ற வைத்த
அணுகுண்டு
எப்போது வெடிக்குமென
பதைப்போடு
பார்ப்பது போலப்
பார்க்கிறேன்
உறக்கத்தில்
இமை மூடிய
அவள் விழிகளை !

அவளை விட
அழகான ஒருத்தி
அங்கே வந்து நின்றாலும்
அந்த அழகியைப்
பார்க்க விடாமல்
ஏதோ ஒரு கற்பு
உள்ளுக்குள்ளே தடுக்கிறது
என்றால்
அந்த கணத்தில்
எனக்கும் அவளுக்கும்
 என்ன உறவு ???






Comments

  1. ஒப்புமைகள் அனைத்தும் அருமை நண்பா எளிய காட்சிகளை உவமைகள் பிரமாண்டமாக்குகிறது ..............உள்ளுக்குள் காதல் துளிர்த்துவிட்டால் இப்படிதான் நிலைகொள்ளாமல் வெளியே சிதறும் வார்த்தைகள் ..............வாழ்த்துக்கள் நண்பா காதல் கைகூட

    ReplyDelete
    Replies
    1. ஹெலோ வெயிட் வெயிட் ...................இக்கவிதையின் ஓரிடத்தில் கூட " நாங்கள் " பார்த்துக் கொள்ளவில்லை ! ஒரு பெண்ணிடம் காதல் கைகூட வேண்டுமென்றால் அவளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து பார்க்க வேண்டும் ! இப்போது இந்த இரயில் சினேகிதியை மீண்டும் எங்கேயாவது பார்ப்பதற்கான நிகழ்தகவு ஒரு லட்சம் கோடியில் ஒன்றாக இருக்கும் ! அப்படியிருக்கையில் " அது " எப்படி சாத்தியம் ?

      Delete
  2. இதனைக் காதல் என்று சொல்லிவிட முடியாது . ஈர்ப்பு எனலாம். அந்த ஈர்ப்பு இரயில் பயணம் முடிந்து வேறு ஒரு பெண்ணை சந்தித்து இது போன்றதொரு எண்ணம் ஏற்படவில்லையெனில் .... அப்போதும் அதே பெண்ணின் நினைவென்றால் அது காதல் .காதல் கோட்டையை தகர்த்து விட்டேனா..
    ஆனால்

    கவிதை அழகு.

    ReplyDelete
    Replies
    1. தோழி ! நீங்கள் சொல்வது சாட்சாத் உண்மை ! ஒரு ஈர்ப்பு ! அம்புட்டுத்தேன் ! மற்றபடி கோட்டையுமில்லை ! சாட்டையுமில்லை ! நன்றி !

      Delete
  3. அழகான வரிகள்... ரசித்தேன்...

    எனது dashboard-ல் இன்னொரு பதிவும் வந்துள்ளது... (தலைப்பு மட்டும் உள்ளது) கவனிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசித்ததால் அந்த வரிகள் இன்னும் அழகாகி விடுகின்றன நண்பரே ! நன்றி !

      Delete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது