Skip to main content

அம்மா
 


உயிர்கள்
அனைத்திற்கும்
முதல் உறவு
அம்மா !
அவள்
இல்லையென்றால்
இந்த உலகம்
வெறும் சும்மா !

போலியாக
அவள்
கண்ணீரை
உகுக்க மாட்டாள் !
பல குழந்தைகள்
என்றாலும்
பாசத்தைப்
பகுக்க மாட்டாள் !

பிள்ளைகளிடத்து
அவள் பார்ப்பதில்லை
தன்மானம் !
அன்பு ஒன்றேதான்
அவள் எதிர்நோக்கும்
சன்மானம் !

எங்கு சென்றாலும்
பின்தொடரும்
அவள்
அன்பு என்ற
 கயிறு !
பாசம் உண்டே
பசியாறும்
பெற்றெடுத்த
அவள் வயிறு !

அவள்
பிசைந்து கொடுக்கும்
சோறு
அமுதத்தை மிஞ்சும்
சுவையிலே !
அவளைத்தான்
வணங்க வேண்டும்
ஆன்றோர் இருந்தாலும்
அவையிலே !

தன் மகற்கென்றால்
சிறுமுள் தைத்தாலும்
பதைத்து விடுவாள் !
தனக்கென்றால்
இடியே விழுந்தாலும்
அதைத் தன்னுள்ளே
புதைத்து விடுவாள் !

தாயை
வணங்காதவனுக்கு
இவ்வுலகில்
தகையில்லை !
தாய்க்குப் பிறகுதான்
தெய்வம் என்றாலும்
அது மிகையில்லை !

தாயை
வணங்குவோன்
முந்தி அடைவான்
சிகரத்தை !
அதனால் தான்
வைத்தார்கள்
அவள் பெயரில்
அகரத்தை !

அவள்,
அனுதினமும்
அன்பைக் கொட்டிக்
களிக்க வைப்பாள் !
வயதானாலும்
எண்ணை தேய்த்துக்
குளிக்க வைப்பாள் !

ஊரான்
குழந்தைக்கும்
திறந்துதானிருக்கும்
அவள் இல்லத்தின்
வாயில் !
அவள் இருப்பிடம்
வீடில்லை
கோயில் !

ஒரு துன்பமென்றால்
அவள் தான்
வந்து நிற்பாள்
ஊருக்கு முன்பே !
தாய்ப்பால் என்பதும்
திரவ வடிவிலான
அவள் அன்பே !
எந்த தெய்வமும்
வைத்து எண்ணப்படும்
அவள் அன்புக்குப்
பின்பே !
இடுகாட்டில்
வேகும்போதும்
நமக்காக உருகும்
அவள் என்பே !












Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது