Skip to main content
கர்மா

 




அது ஒரு
நட்சத்திர நடிகனின்
படம் !
அதற்குத்தான்
போவேனென்று
நண்பன்
ஒரே அடம் !

அதுதான்
அப்படத்தின்
முதல் நாள்
ஓட்டம் !
அதனாலேயே
அங்கு நிலவியது
கட்டுக்கடங்காத
கூட்டம் !

எப்படியோ
வந்து விட்டோம் !
சீட்டு வாங்குவதற்குள்
நொந்து விட்டோம் !

ஒளிர்ந்தது
திரை !
ஆரம்பித்தது
விசில்களின்
உரை !

அங்கே
' தலைவன் '
படுத்துக்கொண்டே
போட்டான்
சண்டை !
கத்திக் கத்தியே
ஒவ்வொருவனுக்கும்
வறண்டது
தொண்டை !

நாங்கள்
அமர்ந்திருந்தது
அரங்கத்தின்
கடைசி வரிசையில் !

மூலையில் இருந்து
முதல்
மூன்று இருக்கைகளில்
அவர்கள் இருந்தார்கள் !

ஞாயிறுதோறும்
சந்தை செல்லும் - ஒரு
தந்தை !
வீட்டில்
சும்மாயிருக்கும்  - ஒரு
அம்மா !
அப்புறம் அவள்,
அவர்களின் மகள் !

அவர்கட்கு அடுத்து
நண்பனும் நானும் !

அவள்,
பக்குவமான
பருவத்தில்
இருந்தாள் !
இளமையைப்
பதற வைக்கும்
உருவத்தில்
இருந்தாள் !

கன்னியைக் கண்டதும்
நண்பனுக்கு
மூக்கு
விடைத்துக் கொண்டது !
காது,
அடைத்துக் கொண்டது !

அவன்,
அடிக்கடி
அவளைப் பார்த்து
மலைத்தான் !
கலைந்த தலையை
மறுபடி மறுபடி
கலைத்தான் !
சந்தர்ப்பம் உருவாக்க
வேண்டுமென்றே
வண்டி சாவியைத்
தொலைத்தான் !
குறும்புக் காரன் என்று
அக்குடும்பத்தின் மனதில்
நிலைத்தான் !

அதுமட்டுமா,

கன்னியைக்கவர
இவன் பங்குக்கு
கத்திக் கத்தியே
கலங்கடித்தான்
அரங்கை !
அவன்
சேஷ்டைகள் யாவும்
ஒத்திருந்தன
ஒரு குரங்கை !

பொறுக்க முடியாமல்
நான் கேட்டேன் !

" நண்பா !
இவ்வாறு செய்வது
பண்பா ? "

அவன் சொன்னான்,

" போடா
கையாலாகாத
கோழை !
வாலிபத் தோட்டத்தில்  - நீ
வீழ்ந்து விட்ட
வாழை !
வேண்டாமென்றால்
ஒத்திக் கொள் !
ஆனமட்டும்  வாயைப்
பொத்திக் கொள் ! "

அவ்வளவுதான்
அமைதியானேன் !

நண்பன்
மீண்டும் ஏறினான்
முருங்கை !
சிதைத்தான்
அக்குடும்பத்தின்
மன ஒருங்கை !

படம்
எப்போது
முடியுமென
அவர்கள்
வெறித்தார்கள் !
முடிந்ததும்
அவசரமாய்
வெளியே
தெறித்தார்கள்  !

நண்பன்
மீண்டும் எவளிடமாவது
ஆதியிலிருந்து ஆரம்பிக்க
வீதியை நோட்டமிட்டான் !

அலையென
வந்தவன்
சிலையென
நின்று விட்டான் !

அங்கே,

இருசக்கர வாகனத்தில்
ஒருவனின் முதுகை
ஒட்டிக் கொண்டிருந்தாள்
ஒரு மங்கை !
அது
அந்த நண்பனின்
திருமணமாகாத
தங்கை !!!

Comments

  1. முடிவில் நல்ல அதிர்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் முதல் வருகைக்கும், கவிதையை உள்வாங்கி வெளியிட்ட கருத்துக்கும் நன்றி திரு. தனபாலன் அவர்களே !

      Delete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது