வழிப்போக்கனான நான் அந்தச் சாலைக்கூட்டம் பிளந்து எட்டிப்பார்க்கிறேன் ! ஒருவன் அடிபட்டிருந்தான் ! அவன் அநேகமாக இறந்து விட்டிருக்கலாம் எனச் சொல்லப்பட்டது ! பார்த்துப் பழகிய ஒரு திரைப்படத்தை உயிரில்லாமல் பார்ப்பது போல காவலர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ! கீழே சரிந்திருந்தது அவன் இருசக்கர வாகனம் ! தலைக்கவசம் இல்லை ! குடித்து வேறு இருக்கிறானாம் ! சர்தான் ! அவசரகால ஊர்தி வந்த பிறகும் யாவரும் எதற்கோ காத்திருந்தனர் ! பார்வையிட அமைச்சர் கிமைச்சர் வருகிறாரோ ? அடிபட்டவன் தொண்டைக்குழியில் உயிரின் அறிவிப்பாக ஒரு மெல்லியஅசைவு தென்படுமுன் அடியேன் அவ்விடம் விட்டகன்றேன் !