Skip to main content
பிரம்மச்சாரி - 3





மனமெல்லாம்
ஒரே
குஷ்டமாயிருக்கிறது !
எவளைப் பார்த்தலும்
மனதுக்கு
இஷ்டமாயிருக்கிறது !
வாழ்வென்பதே
பெரும்
கஷ்டமாயிருக்கிறது !

நாங்கள்,
நொந்து நொந்தே
எழுகிறோம்
காலையில் !
கூலிக்கு
மாரடிக்கிறோம்
ஆலையில் !
தனியாகத்தான்
நடக்கிறோம்
வெறிச்சோடிய
சாலையில் !

அரிதாக
சில பெண்கள்
எங்கள் பாதையில்
நடக்கிறார்கள் !
ஒரு தெருவிளக்கைப்
போலெண்ணி
வெறுமனே எங்களைக்
கடக்கிறார்கள் !

அவ்வளவுதான் !

இப்படியே
எவ்வளவு நாள்தான்
ஏங்குவது ?
எத்தனை முறைதான்
கனவிலேயே காதலை
வாங்குவது ?

அநாதையாய்க்
கிடக்கிறது
அலைபேசி !
விற்றுவிடத்தான்
வேண்டும் அதனை
விலை பேசி !

பொறியாளன்
மருத்துவன்
மென்பொருள் வல்லுனன்
இவர்களுக்குத்தான்
இப்போது
வீசுகிறது அலை !
ஒவ்வொருவனும்
சந்தையில்
நல்ல விலை !
நட்டாற்றில் தவிக்கிறது
எங்களைப் போன்ற
நடுத்தரனின் நிலை !

பட்டம்
படித்தவனுக்கு
திருமணம் கூடாதென்று
சட்டம் வந்தாலும்
கட்டம் சரியில்லையென்று
விட்டம் பார்த்தே
வாழ்க்கையைத்
தொலைக்க வேண்டியது தான் !
வேறு என்ன செய்ய ?







Comments

  1. என்ன இப்படி புலம்புறீங்க...

    உங்களுக்கென்று ஒருத்தவங்க இருப்பாங்க...

    ReplyDelete
    Replies
    1. வாசித்து கருத்து சொன்னதற்கு நன்றி தனபாலன். மற்றபடி காலம் என்ற ஒன்று கடந்த பின்பு நமக்கென்று இருக்கும் ஒருவர் நம்மிடம் வந்தாலென்ன போனாலென்ன நண்பரே ! பசியே போன பின்பு அறுசுவை விருந்தே படித்தாலும் பயனில்லையே ! மற்றபடி உங்களது ஆறுதல் மொழி என்னுள் பாசிடிவ் அதிர்வலைகளை உருவாக்கவே செய்கிறது.

      Delete
  2. இனிமேலா பொறக்க போறாங்க. கவலைப்படாதே தோழா.

    திருமணம் ஆன பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் குரு என நொந்து கொள்ளப் போகிறீர்கள் திருமணம் ஆனவர்களைக் கேட்டுப் பாருங்கள் சொல்வார்கள்

    ReplyDelete
    Replies
    1. தோழி,
      அக்கரைக்கு இக்கரை பச்சை தான். நமக்கு ஒன்று தொடர்ந்து மறுக்கப் படும்போது, அந்த மறுக்கப் படுகின்ற ஒன்றை அது துன்பம் தருவதாகவே இருந்தாலும் அதை நோக்கி நம் மனம் ஈர்க்கப் படுவது இயல்புதானே ! நான் கூட , ஒரு தனியான அறையும் , சில புத்தகங்களும் , ஒரு தொலைக்காட்சியும் இருந்தால் தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று மனதளவில் என்னைத் தயார் படுத்திக் கொண்டதுண்டு. வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ந்து கொண்டால் போயிற்று.

      Delete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது