Skip to main content
இரவுப்பணி


கண்ணெல்லாம்
எரிகிறது !
மண்டைக்குள்
நரகக்காட்சி
தெரிகிறது !

பகலெல்லாம்
படுத்தே கிடந்தாலும்
வருவதென்னவோ
பாதியுறக்கம் தான் !
முந்தின நாள்
பணி தின்று தீர்த்த
மீதியுறக்கம் தான் !

இரவெல்லாம் தூக்கம்
துரத்தத் துரத்த
ஓடவேண்டியிருக்கிறது !
நடுநடுவே
எங்கிருக்கிறோமென
நம்மைநாமே
தேடவேண்டியிருக்கிறது !

எவ்வளவு முயன்றும்
முடியாமல்
சொக்கி சொக்கி
விழுகின்றன
அதிகாலை விழிகள் !
பணி முடிந்து
திரும்புகையில்
மெல்ல மெல்ல
அடைபடுகின்றன
உறக்கம் வரும் வழிகள் !

அதிலும்,
பிரம்மச்சரிய
அறை வாழ்க்கையென்றால்
அது இன்னும் மோசம் !

புறவுலகம் மறக்கும்
எத்தனிப்பில்
புழுப்போல
நெளிந்து நெளிந்தே
சக்தியெல்லாம் வடிந்து
சற்றே கண்ணயரும் வேளையில்
அறை நண்பன்
அலைபேசி
இரக்கமில்லாமல் அதிர
ஒட்டிக்கொண்டிருந்த
கொஞ்சநஞ்ச உறக்கமும்
ஒட்டுமொத்தமாய் உதிர,
பிறகு நிகழ்வதெல்லாம்
பகலென்னும்
பிரம்மாண்ட வெம்மையில்
மீண்டும்
புழுவாகித் துடித்தல் மட்டுமே !

உள்ளிருதே
பற்றியெரியும்
உறக்கத்தின் நெருப்பை
தண்ணீர் ஊற்றி
தற்காலிகமாய்
அணைத்து விட்டு,
வெந்த சோற்றை
விதியே என்று
தின்று விட்டு
இதோ கிளம்பவேண்டும்
இரவில் விழித்திருக்கும்
இன்னொரு உலகத்திற்கு !!!

Comments

  1. அருமையான வரிகள்!இரவு நேரப்பணிகளால் படும் கஷ்டத்தை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி சகோதரி

      Delete

Post a Comment

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...