Skip to main content

அழைப்பு வருமா ?

அழைப்பு வருமா ?



இரண்டு நாட்களாகி விட்டன !
இன்றாவது அழைப்பு வருமா ?
இனிமையை அழைத்து வருமா ?

எங்கிருந்து
என்கிறீர்களா ?
வேறு எங்கிருந்து ?
வீட்டில் இருந்துதான் !

என்றாவது ஓர்நாள்
வீடு அழைக்கும்,
வரன் பார்த்திருப்பார்கள்,
வரச் சொல்வார்கள்
விதி மாறப் போகிறது
வேதனை தீரப் போகிறது !
 -  என்று நான்
காத்திருக்கிறேன் !
காத்துக் கொண்டேயிருக்கிறேன் !

அப்பா,
வேலையைப் பற்றியே
கேட்கிறார் !
அம்மாவோ
உணவு உண்ட
வேளையைப் பற்றியே
கேட்கிறாள் !
" வேறு சங்கதி உண்டா ? "
என்று நானும்
பூடகமாகக் கேட்டுப்பார்க்கிறேன் !
நாடகமாகவாவது
நல்லது சொல்வார்கள் என்று !
ம்ஹூம்...
ஒரு ஆணியும்
பெயரவில்லை !
ஒரு அணுவும்
அசையவில்லை !

இந்தக் காலப்
பெண்கள் இருக்கிறாள்களே !
அம்மம்ம்மா !
அப்பப்ப்ப்பா !
அய்யய்யோ !

ஆர்யா போல வேண்டுமாம் !
சூர்யா போல வேண்டுமாம் !
அவனைப் போல வேண்டுமாம் !
இவனைப் போல வேண்டுமாம் !

ஜவுளிக் கடையில்
குவிந்து கிடக்கும்
ஆடையைத்
தேடுவது போலத்தான்  - தனக்கான
ஆடவனையும்
தேடத் தலைப்படுகிறாள்
இங்கு ஒவ்வொரு பெண்ணும் !

பகட்டானது மட்டுமே
பக்குவமாய்
விலைபேசப் படுகிறது !

இங்கு,
முன்னுரிமை எல்லாம்
மென்பொருள் மேதைகளுக்கே !

அமெரிக்கவாசிகளுக்கு
ஆரவார வரவேற்பு !

சம்பளம்
ஆறு இலக்கமா ?
சாதி தடையில்லை !

முக்கியமாக,
தமிழனாக இருந்தால்
தமிழ் தெரியக்கூடாது !

உயர்நிலைப் பள்ளி தாண்டாத
உத்தமி ஒருத்தி
அறைகூவல் விடுக்கிறாள்,

" மனமுவந்து
மணப்பதென்றால்
மருத்துவனையே
மணப்பேன் ! "

" பொறிவைத்துப்
பிடித்தாலும்
பொறியாளனையே
பிடிப்பேன் ! "

" எழிலதிபனாயினும் - அவன்
தொழிலதிபனாயிருந்தால்
இப்போதே ஒகே ! "


பெண்ணுக்கு
ஒன்றுவிட்ட
இரண்டுவிட்ட
மூன்று விட்ட
சித்தப்பா மகன் சொல்கிறான்,
" மணமகனுக்கு
புருவம் அடர்த்தியில்லை
புறக்கணித்து விடு ! "

ஏழுவிட்ட
எட்டு விட்ட
அத்தை மகள் சொல்கிறாள்,
"  மாப்பிள்ளைக்கு
மூக்கு நீளமில்லை
மறுத்துவிடு ! "

- இதில்
இந்த அக்கப்போருகள் வேறு !






காலன் அழைப்பதற்குள்ளாவது
காமன் வந்து அழைப்பானா ?

மரண ஓலை வருவதற்குள்ளாவது
மணமாலை கிட்டுமா ?

ஆனாலும்
ஆனாலும்

இதோ
இரண்டு நாட்களாகிவிட்டன
வீட்டிலிருந்து அழைப்பு வரும்
என்று
நான் ....இல்லையில்லை
நாங்கள் காத்திருக்கிறோம்
காத்துக்கொண்டே இருக்கிறோம் !!!


Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...