Skip to main content
குற்றவுணர்ச்சி





மழை பெய்த ஒரு
மாலை நேரம் !

மாடத்தில் தந்தை ,
சூடத்தில் தாய் ,
பாடத்தில் பையன் , - சமையல்காரி
வேடத்தில் மனைவி ,
கூடத்தில் நான் !

மழைக்கு இதமாய்
மிளகாய் பஜ்ஜி !

பொதுஅறிவுப் பாடம்
படித்துக்கொண்டிருந்த
பிள்ளையின் ,
" புதுஅறிவு " பாதிக்கக்கூடாதென்று
சத்தத்தைக் குறைவாய் வைத்து
" செய்திகள் " பார்த்துக்கொண்டிருந்தேன் !

தொலைக்காட்சிப்பாவை
பரபரப்பான செய்தியொன்றை
புன்னகை கலையாமல்
வாசித்தாள் !

எந்தநாட்டிலோ பூகம்பமாம் !
இறந்தவர்களின் எண்ணிக்கை
எக்குத்தப்பாய் எகிறிவிட்டதாம் !

புலன்களைக் கூர்மையாக்கி ,
புத்தியின் இடுக்குகளில்
பள்ளிச்சிறுவன் போல
புள்ளிவிபரங்களை
அள்ளி அடுக்கிக்கொண்டேன் !

நாளை அலுவலகத்தில்
மதியஉணவின் பொது
" தொட்டுக்கொள்ள "
சுவையான செய்தி
சுடச்சுடத் தயார் !

இப்போது
பூகம்பத்தின்
மாட்சிகளை விளக்கும்
காட்சிகளைக் காண்பித்தது
தொலைகாட்சி !

மூன்று வயதுக்குழந்தை
அதனுடைய மொழியில்
அம்மாவென்று அலறியபடி
இறந்து கிடந்த
பெண் ஒருத்தியை
எழுப்பும் முயற்சியில்
தோற்றுக்கொண்டிருந்தது !

அக்காட்சியின் கோரம் கண்டு
என் இதயத்தின் ஓரத்தில்
ஒளிந்திருந்த ஈரம் ,
கண்ணீர்த்துளியாகக்
கண்களில் திரையிட்டது !

அதற்குமேல்
சாப்பிடப்பிடிக்காமல்
மீதம் வைத்த
மிளகாய் பஜ்ஜியை
மொய்த்துக்கிடந்தது
குறுகுறுப்பான குற்றவுணர்ச்சி !!!


Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
இன்றுதான் கவனித்தேன்  பூந்தமல்லி   வைத்தீஸ்வரன் கோவிலருகே   தள்ளுவண்டியில்   டிபன் விற்கும்   அந்த இளைஞனின்   மார்புக்கு மத்தியில்   பிரபாகரன்   சிரித்துக் கொண்டிருந்தார்   அவர்   உயிரோடிருக்கிறார் என்று தெரியும்   ஆனால்   எங்கிருக்கிறார் என்ற   எனது நீண்டநாள் கேள்விக்கு   இன்று விடைகிடைத்தது