Skip to main content
கவிதை செய்தல்




உயிரை உருக்கித்


தயாரிக்கும்


உணர்வின் இரசம் !




மூளையைப் பிழிதெடுக்கும்


மொழிச்சாறு !




உணவுண்ணும் போதும்


கனவுண்ணும் கைங்கர்யம் !




கற்பனையின் ,


கையில் அகப்பட்டது


கைவிட்டுப் போகாதிருக்க


கையோடு இருக்கும்


கைக்குறிப்பு !




குளியலறையிலும்


குதித்தாடும் சிந்தனைகள் !




பணிநடுவிலும்


அணிவகுக்கும் அழகுணர்ச்சி !




சக மனிதனின்


சூழல் திருடும் சாமார்த்தியம் !




உலகப் படைப்புகளில்


ஊழல் செய்யும் சாணக்கியம் !




ரகசியங்களை


ரசனைப் படுத்தும் ரசாயனம் !




பழமையைப் புறந்தள்ளும்


பௌதிகம் !




பிறப்பெடுத்த மலர்ச்சியிலும்


பிரசவித்த அயர்ச்சி !




புத்தி சொல்லும் கேனத்தனம்


புத்தி இழக்கும் ஞானத்தனம் !




உணர்ச்சிக்கு


வடிவம் கொடுக்கும் வித்தை ! - மொழியுடனான


புணர்ச்சிக்கு


படுக்கை விரிக்கும் மெத்தை !




எண்ணங்களின் வானவில்லுக்குப்


பேனாவால் மழை பொழிதல் !




உண்மையின் அந்தரங்கம் மறைக்க


பொய்யால் ஆடை நெய்தல் !




ஒரே ஒரு வார்த்தைக்கும்


வாரக்கணக்கில் மெனக்கெடுதல் !




பாலையில் சோலை தேடுதல்


சோலையில் பாலை தேடுதல் !




எண்ணங்களின் கோலத்திற்கு


வார்த்தைகளால் வண்ணமிடுதல் !




அறிவு என்னும் தறி கொண்டு


வரி எனும் நூல் கொண்டு


மொழிப்பெண்ணின் மானம் காக்க


சேலை நெய்யும் கலை !




கவியில் வாழாத நாட்கள் ,


புவியில் வாழாத நாட்கள் !




யாசித்ததை வாசித்து


வாசித்ததை நேசித்து ,


நேசித்ததை யோசித்து ,


யோசித்ததை வேசித்து


வேசித்ததை .....................


ச்சே ! இதற்கு மேல்


எதுகை எட்டவில்லை


விட்டு விடுங்கள் !




இதைப் பற்றி


சொல்லிக்கொண்டே போனால் ,


இது ஒரு


முடியாத முடிவிலி !




இதை ,


இப்போதைக்கு


நிறுத்தி வைக்கும் நான் ஒரு


" முடியாத " அறிவிலி !!!




Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
கலி , கலாச்சாரம், கற்பு கலி இங்கே முற்றிவிட்டது ! கலாச்சார நதி வற்றிவிட்டது ! நாகரீகத் தீ பற்றிவிட்டது ! ஆபாசப் பாம்பு சுற்றிவிட்டது ! எல்லாம் இங்கே கெட்டு விட்டது ! பண்பாட்டு மரம் பட்டு விட்டது ! எல்லாருமே காமத்தில் கொழுக்கிறார்கள் ! பெரும்பாலோர் பிஞ்சிலேயே பழுக்கிறார்கள் ! சல்லடை போட்டுத் தேடினாலும் கற்புக்கரசர்களை - இங்கு காண முடியாது ! ஸ்ரீ ராமனே வந்தாலும் நூறு சதம் கற்பை - இனி பேண முடியாது ! ஒருத்திக்கு ஒருவன் என்றில்லாத நிலை வரப்போகிறது ! கண்காட்சிக் கூடத்தில் கற்புக்கும் ஒரு சிலை வரப்போகிறது ! கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப அமைப்பு சிதையப் போகிறது ! உறவெனும் கோவில் உருத்தெரியாமல் புதையப் போய்கிறது ! அதென்ன அச்சு பிசகாமல் அழகானவர்களுக்கே காதல் வருகிறது ! சொல்லி வைத்தாற்போல சொடக்குப் போடுவதற்குள் மோதல் வருகிறது ! எல்லா காதலர்களும் காது சூடேற பேசுகிறார்கள் காமத்தை ! மோகத்தீயில் வேக வைக்கிறார்கள் அர்த்தராத்திரி சாமத்தை ! அலைபேசியில் அழைக்கும் போது மாறிவிடுகிறது ...