Skip to main content

விகித பிழை

அந்த பேருந்தில் மொத்தமே மூன்று பெண்கள் !
ஒருத்தி மூன்றாம் முப்பதை தொட்டிருந்தாள் ,
இன்னொருத்தி இரண்டு இருபதை கடந்திருந்தாள் ,
மற்றொருத்தி பதினெட்டே நிறைந்திருந்தாள் ,
மொத்தமிருந்த மூவரில் ரசிக்கும்படி இருந்தவள்
மூன்றாவதாய் இருந்தவள் ! - அவளும்
முகம் தெரியாத எவனோ ஒரு யுவனுடன்
செல்லில் சிரித்துக கொண்டிருந்தாள் .
முப்பது கடந்தும் முஹூர்த்தம் பார்க்காதவர்களில்
நானும் ஒருவனாய் அப்பேருந்தில் !
நான் கல்லூரி காலங்களில்
காதலியை தேடாத கோழை ! பணிபுரியும்
தொழிற்சாலை , ஆண்கள் மட்டும் நிறைந்த சிறைச்சாலை !
ஆயிரம் ஆண்களுக்கு எழுநூறு பெண்கள் என்ற
கணக்கில் நான் முன்னூறில் ஒருவன் !
மனசு நிறைந்த வெறுப்போடு நான் வெளியே
பார்த்தேன் !
ஆளில்லாத அப்பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த
ஆறு நாய்களில் ஐந்து நாய்கள் ஆண் நாய்கள் !!!!

Comments

Popular posts from this blog

செத்துப பெய்த மழை

ஒரு மாலை நேரம் மழை பெய்தது . மழைக்குடை இல்லாத நான் நிழற்குடையில் ஒதுங்கினேன். சில்லென்ற மழை , மாலை நேரம் , தித்திக்கும் தனிமை , ஒரு காதலி இருந்தால் கச்சிதமாய் இருக்கும் . நினைத்தபடியே திரும்பிப பார்த்தேன் , - அவள் நின்றிருந்தாள் . பொதுவாக மழையின் பொழுது நிலவு தெரிவதில்லை எனக்குத தெரிந்தது . அவள் கழுத்தை பார்த்தேன் , காலை பார்த்தேன் நல்லவேளை மணமாக வில்லை என மனதும் ரணமாக வில்லை . நான் அவளை பார்த்தேன் , சிரித்தாள். இன்னும் பார்தேன் சிவந்தாள். என மனசுக்குள்ளும் ஒரு மழை பெய்தது . இதயம் இடியாய்த துடித்தது எங்கள் பார்வைகள் உரசியதில் மின்னல் தெறித்தது . அவளின் அருகாமையில் மழையின் உயிரை உணர்ந்தேன் . என இருண்ட பாதையில் ஒரு வெளிச்சம் தெரிந்தது . என வறண்ட வாழ்க்கையில் ஒரு அர்த்தம் பிறந்தது . சற்றே கண்ணீர் வந்தது . அந்த தருணத்தில் தான் அவள் என்னருகே வந்து சொர்க்கத்தின் குரலில் சொன்னாள் , " அரை மணிக்கு ரூபாய் ஆயிரம் மட்டும் " என்று . அதை கேட்டதும் உலகத்தின் மடியில் மீண்டும் தனித்து விடப்பட்டது போல உணர்ந்தேன் . மௌனமாய் மீண்டும் மழையைப பார்த்தேன் . அந்த மழையில் இப்போது உயிர் இல்லை ....
அன்பு நண்பரே,                                      இக்கவிதை ரூபனின் தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டிக்கு அனுப்பப்படுகிறது ! இதில் உள்ள ஒவ்வொரு stanza வையும் ஒரு வரியாக நீங்கள் கருத வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வார்த்தைகளின் வரிசையை  மாற்றாமல் இதில் உள்ளது உள்ளபடியே பதிப்பிக்க வேண்டுகிறேன் ! நாம் சிரித்தால் தீபாவளி   தீபாவளி என்றாலே, கொண்டாட்ட நினைவு உள்ளத்தினின்று அரிப்பதுதான் ! கவலைத்தோலை மனித நாகங்கள் உரிப்பதுதான் ! பட்டாசுகளை பரவசத்தோடு எரிப்பதுதான் ! களிப்பு வியர்வை உடம்பு முழுக்க கரிப்பதுதான் ! மகிழ்ச்சி மதுவை தொண்டைக்குழியில் சரிப்பதுதான் ! உறவுகளோடு உற்சாகமாய் சிரிப்பதுதான் ! உண்டதையெல்லாம் லேகியம் தின்று செரிப்பதுதான் ! பட்ஜெட் துண்டால் புருஷன் கழுத்தை நெரிப்பதுதான் ! விருந்துண்டு தாம்பூலம் தரிப்பதுதான் ! விளக்கேற்ற தாமரை நூலைத் திரிப்பதுதான் ! வாங்கிய வெடிகளை பங்க...
தாம்பத்யம் கடைசியில் நான் அவளை அறைந்து விட்டேன் ! அதிர்ச்சியில் அவள் உறைந்து விட்டாள் ! அதன் பிறகு மௌனம் ! ஊமையாகக் கண்ணீர் ! பார்வையில் ஈட்டி ! சூழலில் சூனியம் ! ச்சே ! அவளை அப்படி நான் அடித்திருக்கக்கூடாது ! அவளும் வார்த்தையால் என்னை இடித்திருக்கக்கூடாது ! நடந்தது நடந்ததுதான் ! கடந்தது கடந்ததுதான் !  அவள் அறைக்குள் சென்று முடங்கினாள் ! அழுது அழுதே  - கொஞ்சம் அடங்கினாள்  ! காரணம் இதுதான் ! உண்ணும் போதே நறநறத்தது பல் ! காரணம் பல்லில் இடறிய ஒரு கல் ! " ஏண்டி இவளே சமைக்க உனக்குத் துப்பில்லை ! சாம்பாரில் கூட உப்பில்லை !  "                 என்றேன். அடிபட்டவள் போல அவள் நிமிர்ந்தாள் ! " ஆமாம் ! ஆமாம் ! சமைக்க எனக்குத் துப்பே இல்லை ! வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் வேலைக்காரியை தப்பே இல்லை !"                  என்றாள். சைத்தானை அத்தோடு விட...