Skip to main content

Posts

நிலா நிலா, அன்பின் சின்னம் ! வான் இலையின் ஒரு கரண்டி அன்னம் ! பாற்கடலில் இருந்து பிய்ந்து வந்த பின்னம் ! வான் போர்வைக்குள் ஒருக்களித்த தேவதையின் ஒரு பக்கக் கன்னம் ! நிலா........ வெண்மை .............. பால் ................ பசி ................. அம்மா ! நிலவைப் பார்த்து . எழுதாதவன் கவிஞன் இல்லை ! நிலவைப் பார்த்து மகிழாதவன் மனிதன் இல்லை ! கவிஞர்கள் செய்கிறார்கள் கவிதை விற்பனை ! அதற்கு மூலதனம் - அவர்கட்கு நிலவு தரும் கற்பனை ! உறவுகளைப் பிரிந்து போகும் ஒவ்வொரு பயணத்திலும் கூடவே வருவது நிலவு மட்டுந்தான் ! நிலவிருக்கும் வரை எவனும் இங்கு அநாதை இல்லை ! நிலவோடு சிறிது உலவிவிட்டு வரலாம் உறக்கம் வராதவர்கள் ! கவலைகளால் பசியெடுக்காதவர்கள் மொட்டை மாடியில் நிலாச் சோறு உண்ணலாம் ! வானப் பூந்தோட்டம், நட்சத்திரப் பூக்கள், இரவுத் தேன் ! வெள்ளைப் பொன்வண்டு நிலா ! வான்குளம், நட்சத்திர மீன்கள், வெள்ளைத் தாமரை நிலா ! வான மைதானம் நட்சத்திர வீரர்கள் வெள்ளைப் பந்து நிலா ! உலகுக்கே பாசப் பசியாற்றும் ஒரு சொட்டுத் தாய்ப்பால்  நிலா !!!
அவளை எனக்குப் பிடிக்கிறது ! அவளை எனக்குப் பிடிக்கிறது ! அவள்  எது செய்தாலும் பிடிக்கிறது ! குறுஞ்செய்தியில் குலவும் போது அவள் ஒற்றை எழுத்தும்  பிடிக்கிறது ! பேசும் போது காற்று கலைக்கும்  அவள் கற்றைக் கூந்தல் பிடிக்கிறது ! வெட்கத்தில்  சிவக்கும் கன்னம் பிடிக்கிறது ! கோபத்தில் சிவக்கும் மூக்கு பிடிக்கிறது ! பின்னலிடும்  பார்வை பிடிக்கிறது !  பின்னங்கழுத்து வேர்வை  பிடிக்கிறது ! அவளை  சும்மாவேனும் பிடிக்கிறது !  சும்மா சும்மா பிடிக்கிறது ! காற்றில் பறக்கும் அவள் துப்பட்டா பிடிக்கிறது !  என் பார்வையுணர்ந்து அவள் அப்பட்டா  என்றாலும் அது கூடப் பிடிக்கிறது ! அவ்வப்போது அவள் அழுவது பிடிக்கிறது ! தாமதமாகி  வெடுக்கென்று அவள் எழுவது பிடிக்கிறது !  அவள் பேசினாலும் பிடிக்கிறது !  கோபத்தில் ஏசினாலும் பிடிக்கிறது ! அவள், கன்னத்தின் குழி பிடிக்கிறது ! கீழுதட்டின் சுழி பிடிக்கிறது ! அவள் முத்தம் மறுப்பது பிடிகிறது !  சத்தம் வெறுப்பது பிடிக்கறது ! அவளிடம்  ஏ...
குறிப்பு : ஒரு பாமரனின் கண்ணோட்டத்தில் தான் இந்தக் கவிதை எழுதப் பட்டுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. அப்படி ஏதும் இருந்தால் சுக்கிர பகவானே எனை மன்னித்து விடு ! காட்சிப் பிழைகள் அது ஒரு பேருந்து நிறுத்தம் ! பகல், பத்துமணி இருக்கும் பத்தடி தூரத்தில் அவள் வந்து நின்றாள் ! பருவம் தான் உள்ளம் உதறவைக்கும் உருவம் தான் ! நானும் அவளும் தனித்திருந்தோம் ! சூழலுக்கு இதமாய் இனித்திருந்தோம் ! வெட்ட வெளியை வெறித்தபடி வெறுமனே நின்றாள் ! நேர்ப்பார்வை பார்ப்பவள்  - திரும்பியொரு கூர்ப்பார்வை பார்த்தாளென்றால் வேர்வரை அது பாயுமே ! ஏக்க அலை ஓரளவாவது ஓயுமே ! பாரடி ! பாரடி ! பைங்கிளி ! பைங்கிளி ! இரு ! இரு !  - கொஞ்சம் பொறு ! பொறு ! பார்ப்பாள் ! பார்ப்பாள் ! இளமைக்கு நீர்தன்னை வார்ப்பாள் ! வார்ப்பாள் ! எனக்கு நானே வேதம் ஓதினேன் ! பொறுமையிழந்து உஸ்ஸ்  என்று காற்று ஊதினேன் ! திருப்பதி பகவானே திருப்பம் தா ! அவளுக்கு எனைப் பார்க்கும் விருப்பம் தா ! திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டு திரும்பிப் பார்த்தேன் ! திக் என்ற...
சில நிராகரிப்புகளும் ஒரு தெளிவும் கடைசியில் அவளும் என்னை நிராகரித்து விட்டாள் ! மெலிந்த தேகம் மாநிறம் சராசரித் தோற்றம் நடுத்தர வர்க்கம் ! பட்டம் ஒன்று படித்திருந்தாள் ! கட்டம் கட்டிய புகைப்படத்தில் விட்டம் பார்த்து சிரித்திருந்தாள் ! மூன்று நாட்களாய் மனதளவில் அவளை மனைவியாய் வரித்திருந்தேன் ! இவள் தான் இவள் தானென்று இருநூறு முறையாவது இதயத்திடம் இறுமாந்திருப்பேன் ! நிறத்தைக் காரணங்காட்டி நிராகரித்து விட்டாள் ! வாழ்த்துக்களோடு விடை பெற்றுக் கொண்டாள் ! வாழ்த்துதல் நிராகரிப்பின் நாசுக்கான மொழி ! திருமணச் சந்தையில் விலை போகாததென் தலையெழுத்து தானென அலை பாயும் மனதைத் தேற்ற  முயன்று தோற்றுக் கொண்டிருந்தேன் ! மாலை வந்ததும் ஆலையில் இருந்து வேலை முடிந்து சாலையில் நடந்தேன் ! சில காட்சிகள் கண்ணில் தட்டுப்பட்டதும் மனக்கவலை சற்றே மட்டுப் பட்டது ! அவையாவன, ஊன்று கோல் பற்றி சாலை கடக்கக் காத்திருந்தான் ஊனமுற்ற ஒருவன் ! எப்போது வீடு போய்ச் சேர்வானோ ? வாங்குவோர்கள் வாங்குவார்களென காய்கறிகளைக் கூறு கட்டி வைத்திருக்கிறாள் நூறு தொடும் க...
சில பல காரணங்களுக்காக ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு வேறு வலைப்பூவிற்கு மாற்றப் படுகிறது.
சில பல காரணங்களுக்காக ஒரு சாமானியனின் பிரம்மச்சரிய டைரிக் குறிப்பு வேறு வலைப்பூவிற்கு மாற்றப் படுகிறது.
 தயவு செய்து சண்டை போடுங்கள் ஒரு சண்டை தேவைப்படுகிறது ! மாதத்தில் ஓர் நாள், வாரத்தில் ஓர் நாள் வாழ்வின் சலிப்பு நீக்க ஒரு சண்டை தேவைப்படுகிறது ! மண்டை முழுக்கக் குடைச்சல் இருந்தால் அண்டை வீட்டானிடம் சண்டை போடுங்கள் சரியாகிவிடும் ! பாட்டு ஓடும் பேருந்தில் சீட்டுக் கிழித்து சலித்த நடத்துனன் நோட்டு நீட்டினால் - ஒரு காட்டுக் காட்டுவது சண்டையை எதிர்பார்த்துத்தான் ! நாளெல்லாம் நின்று வந்த கடுப்பை எவன் வாயையாவது தின்று தீர்க்கலாம் என்று நினைக்கலாம் அவன் ! சமையல் பாத்திரத்தின் ' கழுவல் ' சரியில்லை எனில் அன்றைய இரவில் ' தழுவல் ' சுகமாயிருக்கிறது கணவனுக்கும் மனைவிக்கும் ! காரணம், பாத்திரத்தின் பொருட்டு கழுவலுக்கும் தழுவலுக்கும் நடுவில் தம்பதியரிடையே தம்படியளவேனும் சண்டை நடந்திருக்கும் ! அம்மா அடிப்பாள் என்று தெரிந்திருந்தும் சும்மா சும்மா புழுதியில் புரள்கிறான் பள்ளிச் சிறுவன் ! ஏன் தெரியுமா ? அடி வாங்கி அழுத பிறகு, அம்மா ஊட்டும் சோறு அவ்வளவு ருசியாயிருக்கிறது அவனுக்கு ! காதலில் சலிப்பு எனும் பழுது போக்க பொழுது போக்காகவாவ...