Skip to main content

Posts

குற்றவுணர்ச்சி மழை பெய்த ஒரு மாலை நேரம் ! மாடத்தில் தந்தை , சூடத்தில் தாய் , பாடத்தில் பையன் , - சமையல்காரி வேடத்தில் மனைவி , கூடத்தில் நான் ! மழைக்கு இதமாய் மிளகாய் பஜ்ஜி ! பொதுஅறிவுப் பாடம் படித்துக்கொண்டிருந்த பிள்ளையின் , " புதுஅறிவு " பாதிக்கக்கூடாதென்று சத்தத்தைக் குறைவாய் வைத்து " செய்திகள் " பார்த்துக்கொண்டிருந்தேன் ! தொலைக்காட்சிப்பாவை பரபரப்பான செய்தியொன்றை புன்னகை கலையாமல் வாசித்தாள் ! எந்தநாட்டிலோ பூகம்பமாம் ! இறந்தவர்களின் எண்ணிக்கை எக்குத்தப்பாய் எகிறிவிட்டதாம் ! புலன்களைக் கூர்மையாக்கி , புத்தியின் இடுக்குகளில் பள்ளிச்சிறுவன் போல புள்ளிவிபரங்களை அள்ளி அடுக்கிக்கொண்டேன் ! நாளை அலுவலகத்தில் மதியஉணவின் பொது " தொட்டுக்கொள்ள " சுவையான செய்தி சுடச்சுடத் தயார் ! இப்போது பூகம்பத்தின் மாட்சிகளை விளக்கும் காட்சிகளைக் காண்பித்தது தொலைகாட்சி ! மூன்று வயதுக்குழந்தை அதனுடைய மொழியில் அம்மாவென்று அலறியபடி இறந்து கிடந்த பெண் ஒருத்தியை எழுப்பும் முயற்சியில் தோற்றுக்கொண்டிருந்தது ! அக்காட்சியின் கோரம் கண்டு என் இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருந்த ஈரம் , கண்ணீர்...
மாந்தி - நாவல் அத்தியாயம் இரண்டு முன்னொரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாக இருந்த இடம் இப்போது " பொறம்போக்கு நிலமாக " , பொட்டல் காடாக இருந்தது . அந்தப்பகுதியை தற்காலிகமாக ஆக்கிரமித்திருந்தனர் மாணவ மாணவிகள் . அனைவரும் முதுகலை வரலாறு . ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருந்தனர் . மண்டையில் முடி இருந்த , கண்ணாடி போடாத புரபசர் ஒருவர் அந்தப்பகுதியின் அருமை பெருமைகளை மாணாக்கர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் . அவர்களும் ஆவென்று வாயைப் பிளந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தனர் . வகுப்பறைச் சூழலை விட்டு , சுதந்திரமான வெட்டவெளி சூழலில் ஆசிரியர் சொல்வதைக் கேட்பதற்கு அவர்களுக்கு உற்சாகமாக இருந்தது . சற்று நேரம் அந்தப்பகுதிகளின் சிறப்புகளை விளக்கிய ஆசிரியர் , பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வராயும் பகுதிக்கு மாணவர்களைக் கூட்டிச்சென்றார் . பெரிய குழிமாதிரி வெட்டி என்னத்தையோ தோண்டிக்கொண்டிருந்தனர் . ஹரிப்ரியாவுக்கு போர் அடித்தது . ஹரிப்ரியா ? வயது , திருமணத்திற்குத் தயாராகிவிட்ட இருபத்தி ஒன...
மாந்தி - நாவல் சக்கரவர்த்தி கோபிநாத் , தனது தோட்டத்தில் . தனது ஆஸ்தான சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு , அன்றைய தினசரியின் நாலாவது பக்கத்தை நாலாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தார் . வாழ்க்கை அவருக்கு , எதோ அவார்ட் வாங்கின ஒரு திரைப்படத்தைப் போல பிரேம் பை பிரேமாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது . அறுபது வயதாகிவிட்ட அவர் இனிமேல் வாழ்க்கையில் சாதிக்கவேண்டிய அம்சங்கள் எதுவும் இல்லை . மனைவி போய்ச்சேர்ந்து விட்டாள் . ஒரே மகள் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டாள் . இங்கு அவரும் , நாளுக்கு இரண்டு வேளை " வந்து போகும் " ஒரு வேலைக்காரியும் மட்டும் ! சக்கரவர்த்தி கோபிநாத் அந்த வேலைக்காரியை , " கரெக்ட் " செய்யலாமென்று கூட நினைத்தார் . அப்படி " கரெக்ட் " செய்யும் முயற்சியில் ஓரளவாவது பொழுது போகுமே என்பது அவர் எண்ணம் . ராணிக்கு வயது ஒரு நாற்பது நாற்பத்தி ஐந்து இருக்கும் . சும்மா சொல்லக்கூடாது , சும்மா கும்மென்று இருப்பாள் . ஒரு நாள் , அவ...
உன் மீது சில புகார்கள் அடியே , காதலைக் கைது செய்த நான் - இப்போது காதலின் கைதியாகி நிற்கிறேன் ! தங்கத்தால் செய்யப்பட்டதைத் தவிர இந்த சிறைக்கம்பிகளுக்கு வேறு சிறப்புகள் எதுவுமில்லை ! சிறகடித்து சந்தோஷமாகப் பறந்து கொண்டிருந்தேனடி ! எனது இறக்கைகளை வெட்டிவிட்டு கால்களைக் கட்டிவிட்டாய் ! பறக்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல் நான் நொந்து நொந்து நூலாகிறேன் ! வெந்து வெந்து வீணாகிறேன் ! விடுதியில் இருக்கிறாய் நீ ! வீட்டில் இருக்கிறேன் நான் ! சாலையில் நடப்பதைப்போன்றது உன் நிலை ! கம்பி மீது நடப்பதைப் போன்றது என் நிலை ! உனக்காக நான் விழுந்து எழுந்து எழுந்து விழுந்து விழுப்புண்கள் பெற்றாலும் விருப்பத்தோடு உன் விருப்பம் நிறைவேற்ற விழைகிறேன் ! நீயோ உனக்கான சாலையில் எனக்காக நடப்பதற்கே சிரமாயிருக்கிறது என்கிறாய் ! எந்த ஊர் நியாயம் இது ? பக்கத்து வீட்டுக்காரனைப் பலநாட்களாகத் தெரியும் ! ஈன்றெடுத்த பச்சிளம் குழந்தையைப் பத்து நாட்களாகத்தான் தெரியும் ! அதனால் பக்கத்து வீட்டுக்காரனே பெரிதும் உயர்ந்தவன் என்று பைத்தியகாரன் கூடப் பிதற்ற மாட்டான் ! உனது பக்கத்து வீட்டுக்காரர்களுக்காக பச்சிளம் குழ...
ஒரு காதலின் முளை நாம் வகுப்பினுள் இருக்கும்போதெல்லாம் நான் என்னை உன் மூலமாகவே உணர்ந்திருக்கிறேன் ! அதுபோல நீயும் உன்னை என் மூலமாக உணர்ந்திருப்பாய் ! தோழிகளுடன் எதிரே வருகையில் நீ தலைகுனிந்து சென்றாலும் உன் சிவந்த கன்னங்கள் காட்டிக் கொடுக்கின்றன ! தொலைவில் வரும்போதே என்னைப்பார்த்து ரகசியமாய்ப் புன்னகைத்திருக்கிறாய் என்பதை ! பேருந்தில் நான் உன்னைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன் ! நீயும் மௌனமாக அனுமதித்துக் கொண்டேஇருந்தாய் ! திடீரென்று ஒரே நொடியில் ஒட்டுமொத்தமாக என்னைப் பார்த்துவிட்டு உனக்கான நிறுத்தத்தில் இறங்கிச் சென்றாய் ! அதிர்ச்சியில் எனக்கான நிறுத்தத்தில் நான் இறங்காமல் இரண்டு நிறுத்தங்கள் தள்ளியே இறங்கினேன் ! நம் பார்வைகள் சங்கமிக்கும் போது உண்டாகும் மின்சாரத்தைச் சேமிக்க உடனடியாக ஒரு கருவி செய்யச்சொல்லி அரசாங்கத்திற்கு ஆலோசனை தரலாம் என்றிருக்கிறேன் நான் ! என்ன சொல்கிறாய் நீ ? உண்மையைச்சொல் ! ஒருநாள் வகுப்பிற்குத் தாமதமாய் வந்து திட்டு வாங்கினேன் என்று அடுத்த நாள் நீயும் தாமதமாய் வந்து திட்டு வாங்கியது எனக்காகத்தானே ? கலைந்த உன் கூந்தலை விரல்களால் நளினமாக நீ ஒதுக்கி...
எதிரே வரும் அவள் தொலைவில் வரும்போதே தலையுயர்த்திப் பார்த்து , கடல் அலைபோல் மனதை அலைக்கழித்து , எண்ணத்தை சிதற வைத்து இதயத்தைப் பதற வைத்து , இரத்த ஓட்டம் உறையச்செய்து நாடித்துடிப்பு குறையச்செய்து , அருகே வந்ததும் பார்வையை உரச விட்டு , இளமைக்கு மழை பெய்து புன்னகைத்து உயிர் கொய்து , - என இவ்வளவும் நடத்தி விட்டு எதுவுமே நடக்காதது போல எப்படித்தான் கடந்து போக முடிகிறதோ தொடர்ந்து மூன்றாவது நாளாக எனக்கு எதிரே வரும் அவளால் ???
தொலைக்காட்சியைத் துறந்திடுங்கள் வாரத்தில் ஓர்நாள் ஏதேனும் ஒரு கிழமையில் தொலைக்காட்சியைத் துறந்திடுங்கள் ! மாலைபோட்டு மாலை உங்களை வரவேற்கும் ! அன்றைக்கென்று உங்கள் மனைவி உங்களுக்கு அழகாகத் தெரிவாள் ! கூடம் சொன்ன பாடம் படிக்கும் மகளின் சந்தேகம் தெளிவித்து சந்தோசம் கொள்வீர்கள் ! சும்மாவேனும் அம்மாவிடம் அன்போடு பேசுவீர்கள் ! சர்க்கரை நோய்பற்றி அக்கறையாய் அப்பாவிடம் விசாரிப்பீர்கள் ! இல்லம் தேடிவந்த நண்பரிடம் நல்லவிதமாய் நலம் விசாரித்து - நட்பை மேலும் பலம் பெறச்செய்வீர்கள் ! அண்டை அயலூரில் வாழும் தங்கை தமக்கையிடம் பாசம் ஊட்டி மாமன் மச்சானிடம் நேசம் காட்டி உறவுப்பாலத்தை உறுதிப்படுத்துவீர்கள் ! அந்த வாரத்தின் வாரஇதழை வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல் வாசித்து முடிப்பீர்கள் ! மாத இறுதியில் குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்தோடு போய்வரும் இனிய திட்டமொன்று உங்கள் இதயத்தில் உதயமாகும் ! அன்பு மனைவி ஆசையோடு வார்த்துத்தரும் தோசையில் அன்பானது முறுகலாய் வெளிப்பட்டு முறுவலிக்கும் ! இரவு உணவு முடித்து தெருக்கோடிக் கடைவரை நடை ...