விளையாடிப் பார்க்கலாம் வா
வாலிபா கேள் !
நீ குருடனல்ல
இ ருட்டில் இருக்கிறாய்
அவ்வளவு தான் !
நீ முடவனல்ல
காயம் பட்டவன் - அதை
காலம் ஆற்றி விடும்
கவலை ப்படாதே !
கதவு சாத்தியிருக்கிறது என
கைகட்டி நிற்காதே !
ஒரு முறை தட்டிப் பார் !
அது பூட்டப்படாமல்
கூட இருக்கலாம் !
இரண்டு அடிகளை மட்டும்
நீயாக எடுத்து வை !
மூன்றாவது அடிக்கு
முயற்சி இல்லாமல்
முன்னேறி இருப்பாய் !
வெற்றிக்கான படிகட்டுகள்
மொத்தமே நூறு !
ஒரே ஒரு எட்டு வை !
நீ நின்றிருப்பது
தொண்ணூற்றி ஒன்பதாவது
படிகட்டாகக் கூட இருக்கலாம் !
உனது
ச ோகத்தின் ஈரங்கள்
த ாமரைத் தண்ணீர் போல
தொலையட்டும் !
அவை தந்த
பாடத்தின் சுவடுகள்
பசுமரத்து ஆணிபோல
பதியட்டும் !
மரத்தடிகள்
இளைப்பாற மட்டுமே !
தங்கு வதற்கு அல்ல .
முன்னேறி நடந்து பார்
மாளிகைக்கே மன்னனாவாய் !
காதல் என்பது
இளமையின் போதை மாத்திரை !
அதன் விலையும் அதிகம் !
விளைவுகளும் அதிகம் !
எச்சரிக்கையாய் இரு !
வெள...