Skip to main content

Posts

அம்மா   உயிர்கள் அனைத்திற்கும் முதல் உறவு அம்மா ! அவள் இல்லையென்றால் இந்த உலகம் வெறும் சும்மா ! போலியாக அவள் கண்ணீரை உகுக்க மாட்டாள் ! பல குழந்தைகள் என்றாலும் பாசத்தைப் பகுக்க மாட்டாள் ! பிள்ளைகளிடத்து அவள் பார்ப்பதில்லை தன்மானம் ! அன்பு ஒன்றேதான் அவள் எதிர்நோக்கும் சன்மானம் ! எங்கு சென்றாலும் பின்தொடரும் அவள் அன்பு என்ற   கயிறு ! பாசம் உண்டே பசியாறும் பெற்றெடுத்த அவள் வயிறு ! அவள் பிசைந்து கொடுக்கும் சோறு அமுதத்தை மிஞ்சும் சுவையிலே ! அவளைத்தான் வணங்க வேண்டும் ஆன்றோர் இருந்தாலும் அவையிலே ! தன் மகற்கென்றால் சிறுமுள் தைத்தாலும் பதைத்து விடுவாள் ! தனக்கென்றால் இடியே விழுந்தாலும் அதைத் தன்னுள்ளே புதைத்து விடுவாள் ! தாயை வணங்காதவனுக்கு இவ்வுலகில் தகையில்லை ! தாய்க்குப் பிறகுதான் தெய்வம் என்றாலும் அது மிகையில்லை ! தாயை வணங்குவோன் முந்தி அடைவான் சிகரத்தை ! அதனால் தான் வைத்தார்கள் அவள் பெயரில் அகரத்தை ! அவள் , அனுதினமும...
அம்மா  உயிர்கள் அனைத்திற்கும் முதல் உறவு அம்மா ! அவள் இல்லையென்றால் இந்த உலகம் வெறும் சும்மா ! போலியாக அவள் கண்ணீரை உகுக்க மாட்டாள் ! பல குழந்தைகள் என்றாலும் பாசத்தைப் பகுக்க மாட்டாள் ! பிள்ளைகளிடத்து அவள் பார்ப்பதில்லை தன்மானம் ! அன்பு ஒன்றேதான் அவள் எதிர்நோக்கும் சன்மானம் ! எங்கு சென்றாலும் பின்தொடரும் அவள் அன்பு என்ற  கயிறு ! பாசம் உண்டே பசியாறும் ;பெற்றெடுத்த அவள் வயிறு ! அவள் பிசைந்து கொடுக்கும் சோறு அமுதத்தை மிஞ்சும் சுவையிலே ! அவளைத்தான் வணங்க வேண்டும் ஆன்றோர் இருந்தாலும் அவையிலே ! தன் மகற்கென்றால் சிறுமுள் தைத்தாலும் பதைத்து விடுவாள் ! தனக்கென்றால் இடியே விழுந்தாலும் அதைத் தன்னுள்ளே புதைத்து விடுவாள் ! தாயை வணங்காதவனுக்கு இவ்வுலகில் தகையில்லை ! தாய்க்குப் பிறகுதான் தெய்வம் என்றாலும் அது மிகையில்லை ! தாயை வணங்குவோன் முந்தி அடைவான் சிகரத்தை ! அதனால் தான் வைத்தார்கள் அவள் பெயரில் அகரத்தை ! அவள், அனுதினமும் அன்பைக் கொட்டிக் களிக்க வைப்பாள் ! வயதானாலும் எண்ணை தேய்த்துக் குளிக்க வைப்பாள் ! ஊ...
பித்தன் ஊருக்குத்தான் அவன் பித்தன் ! உள்ளுக்குள்ளே அவன் சித்தன் ! ஊரார், அவன் உடம்பெல்லாம் ஒரே அழுக்கு என்றார்கள் ! அவன் இருப்பது அந்த வீதிக்கே இழுக்கு என்றார்கள் ! அவனிடமிருந்தது ஒரேயொரு கிழிந்த வேட்டி ! தெருநாய்கள்தான் அவனுக்கிருக்கும் ஒரே போட்டி ! அவனுக்கு எப்போதும் கண்ணில் ஒரு கிறக்கமிருக்கும்  ! பகல் பொழுதிலும் மரத்தடியில் உறக்கமிருக்கும் ! எண்ணையே காணாதிருந்தது அவன் தலை ! பரிகசிக்கக்கூடியது தான் அவன் நிலை ! இப்போதுதான் அவன் தாழ்ந்தவனாம் ! ஒருகாலத்தில் நன்றாக வாழ்ந்தவனாம் ! வருவோர்க்கெல்லாம் வாரி வாரிக் கொடுத்தவனாம் ! அந்த மட்டில் அவன் தன்னைத்தானே கெடுத்தவனாம் ! சில குறும்புக்காரர்கள் அவனை கல்லால் அடித்தார்கள் ! சில " குடும்பக்காரர்கள் " அவனை சொல்லால் அடித்தார்கள் ! தெருக்கோடியில் இருக்கிறது ஒரு தேநீர் கடை ! மிகவும் பிரசித்தம் அதன் மாலை நேரத்து வடை ! எப்போதுமிருக்கும் அங்கு வாடிக்கையாளர்களின் படை ! கடையையே சுற்றிச்சுற்றி வரும் இந்தப் பித்தனின் நடை ! கடைக்காரன் அவனுக்குக் கொடுப்பான் மீந்ததையெல...
தொண்டன்  அவன் பெயர் குப்பன் ! அவன் மூன்று பிள்ளைகளுக்கு அப்பன் ! பிள்ளைகள் மூன்றுமே ஆண்கள் ! அவர்களே அவன் நம்பிக்கையின் தூண்கள் ! குப்பன் குடியிருப்பது கிண்டி ! இழுக்கிறான் கை வண்டி ! வியர்வைக்குப் பிறகே எடுக்கிறான் உண்டி ! யாரையுமில்லை அவன் அண்டி ! அவனுக்கும் இருக்கிறது ஒரு கட்சி ! அக்கட்சியில் அவன் சிறகொடிந்த பட்சி ! ஒருநாள், குப்பன் கட்ட ஆரம்பித்தான் தோரணம் ! அதற்குக் கிடைத்து விட்டது அவனுக்குக் காரணம் ! அவன், தலைவன் வருகிறானாம் ! வாக்குக் கேட்டு வாக்குறுதிகள் தருகிறானாம் ! குப்பன் , விடியும் வரை சுவரொட்டி ஓட்டினான் ! முடியும் வரை வியர்வையைக் கொட்டினான் ! தலைவனுக்குத் தெரியாது குப்பனின் முகம் ! குப்பனுக்குத் தெரியாது தலைவனின் அகம் ! அத்தலைவனின் காரியதரிசி ஒரு பெண் ! பெண்ணென்றால் தலைவனுக்கு உடம்பெல்லாம் கண் ! ஓ ! அதெல்லாம் மேலிட விவகாரம் ! மேலும் பேசக்கூடாது ! ம்க்கும் ! குப்பன் கூட்டத்தில் காத்திருந்தான் ! தலைவன் ஏறினான் மேடை ! பேச்சில் அவன் நிற்காத ஓடை ! அவன், தொண்டை கிழியப் பேசினான் ! ...
பிரம்மச்சாரி - 2  ச்சை ! வாழ்ந்து வாழ்ந்து அலுத்து விட்டது ! ஏங்கி ஏங்கி இதயம் உலுத்து விட்டது ! சொடுக்குப் போடுவதற்குள் இதோ வந்துவிடும் நாற்பது ! திருமணப் போட்டியில் எத்தனை முறைதான் தோற்பது ? ஆணும் பெண்ணும் சேர்ந்து படிப்பதுதான் வாழ்க்கை எனும் பாடம் ! கால்களே போனபின்பு காளைகளுக்கு எதற்கு லாடம் ? முன்னூறு ஆண்களுக்கு பெண்கள் மொத்தமே மூன்றுதான் ! நகரப் பேருந்து கூட அதற்கொரு நல்ல சான்றுதான் ! பகிர்ந்துண்ண காதலியில்லை கடற்கரையில் வாங்கிய சுண்டலை ! யார் கரைசேர்ப்பார்கள் எங்கள் வாலிபம் என்னும் வண்டலை ? எந்தப்பாலினமும் எதிர்பார்ப்பது எதிர் பாலினத்தின் சூழலை ! எங்கு போய் முறையிடுவது பெண்சிசுக்கொலை என்ற ஊழலை ? பெண்ணை எதிர்பார்த்து கண்ணை மூடிக்கொண்டு ஏதாவதொரு எண்ணை அலைபேசியில் அழுத்தினால் எதிர்முனையில் ஏக்கத்தோடு ஹலோ சொல்கிறான் ' என்னைப் போல் ஒருவன் ' ! பெண் பிறந்தாலே நாளை பட்டாசு வெடிக்கும் நிலை வரும் ! கனிந்து நிற்கும் கிழவிகளுக்கும் கண்ணம்மா பேட்டையில் சிலை வரும் ! பொன்னகையா கேட்கிறோம் சம்மதம் சொல்லும் ...
காயத்ரிக்கு லவ் லெட்டர்  (சிறுகதை )  நான் ஒரு இளைஞன் . எனக்கென்று சில காரியங்கள் இருக்கின்றன . நானொன்றும் வெட்டியாய் இல்லை . கல்லூரி பயில்கிறேன் , அது போதாதா ? சமுதாயத்திற்குக் கடமையாற்றுவதை வயதாகிப் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் . அப்படியே  வயதானாலும் கடமை ஆற்றித் தான் ஆகவேண்டுமா என்ன ? நீங்கள் ஓஷோ படித்திருக்கிறீர்களா ? படித்துப் பாருங்கள் , இந்தக் கடமை , ஒழுக்கம் , விழுப்பம் , நன்மை , கின்மை யாவும் ஒரு மாயையே என்பது புரியும் . அரிக்கிறது , சொறிகிறோம் , சுகமாக இருக்கிறது அவ்வளவுதான் . அந்த கணத்தில் அந்த அரிப்பும் . சொறிதலும் , சுகமும் அதன் பின்னான எரிச்சலும் உண்மையானவைகள் . அதை விடுத்து இந்தக் கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு என்பதெல்லாம் ஏமாற்று வார்த்தைகள் .   நான் இன்று காயத்ரிக்கு  லட்டர் கொடுத்தே ஆகவேண்டும் . நான் மூன்றாமாண்டு ! அவள் முதலாமாண்டு ! காயத்ரி ! என்ன ஒரு பெயர் பாருங்கள் ! இந்தப் பெயரில் சத்தியமாக காந்தமான ஒரு மின்சார உணர்ச்சி இருக்கவே செய்கிறது . அவளது நண்பிகள்...