Skip to main content

Posts

புனிதம் ஓட ஆரம்பித்தது ரயில் ! ஆடி ஆடி போவதில் தான் என்ன ஒரு ஒயில் ! கூ கூ எனக் கூவுவதில் அது ஒரு குயில் !, ஓரிரு நிமிடத்தில் ஏற்படும் தன்னிலை மறந்த துயில் ! போய்க் கொண்டிருக்கிறேன் ஊர் ! எங்கெங்கோ கிளை பரப்பினும் அங்குதானிருக்கிறது வேர் ! புறப்படும் முன்பே ஆண்டவனிடம் வேண்டியிருந்தேன் ! மனப் பரப்பில் ஆசைப் பள்ளம் தோண்டியிருந்தேன் ! அப்படியென்ன ஆசை அது ? பயணத்தின் போது எதிரே வேண்டும் இளமையான ஒரு  பெண் ! அப்புறம் அரும்பாடுபட்டாவது அறிய வேண்டும் அவளது அலைபேசியின் எண் ! நானும் அவளும் ஒருவரையொருவர் பார்க்க வேண்டும் ! கண்ணோடு கண் கோர்க்க வேண்டும் ! இதயத்தை இடம் மாற்றி சேர்க்க வேண்டும் ! இளமை வேருக்கு காதல் ரசம் வார்க்க வேண்டும் ! பக்குவமாய் இதைத் தான் இறைவன் காதில் போட்டிருந்தேன் ! எண்ணியது ஈடேறும்படி ஈசனவன் காலைப் பிடித்துக் கேட்டிருந்தேன் ! அப்போது அங்கு வந்திட்டாள் அட்டகாசமாய் ஒருத்தி ! இதயத்தில் வெடித்தது பஞ்சு பஞ்சாய் பருத்தி ! பார்த்ததுமே புன்னகை ! சத்தியமாய்த் தோற்றது அவளணிந்த பொன்னகை ! ஆஹா ........
பிரம்மச்சரியம்    திருமணம் இல்லாமல் வாழ முடியாதா ? இருமனம் இணையாமல் இருக்க முடியாதா ? இரண்டு மாதங்களில் அகவை முப்பது கடக்கப் போகிறது ! முதுமை வந்து மொத்த உடம்பையும் அடக்கப் போகிறது ! நிரந்தரம் தான் இந்தத் தனிமை ! இருக்கவே போவதில்லை இனி  இனிமை ! வற்றி வற்றியே காய்கிறது ஆண்ட்ரோஜன்  ! பகட்டை நோக்கியே பாய்கிறது ஈஸ்ட்ரோஜன்  !   தோலில் இல்லை சிவப்பு ! வாழ்வில் இல்லை உவப்பு ! நடுத்தரமென்றாலே இங்கு கசப்பு ! நடப்பதெல்லாம்  வெறும் பசப்பு ! வசந்தத்திற்கு வைக்கப்பட்டது சிறை ! இனி வாழ்வென்பது வெறும் அறை ! நிரந்தரமாகி விட்டது குறை ! இது  எந்தப் பாவத்தின் கறை ? ஒவ்வொருத்திக்கும் வேண்டும் அனைத்திலும் சிறந்தவன் ! ஒன்று குறைந்தாலும் அவள்கட்கு அவன்  இறந்தவன் ! கருணையில்லாதவன் காமன் ! இனி உருவாக மாட்டான் மருமகனுக்கொரு மாமன் ! பாழும் உலகில் பெண்களே இல்லை ! மக்கட்தொகையில் அவர்கள் எண்களே இல்லை ! இனி புகைக்க வேண்டும் கஞ்ச...
இந்த நாள் இனிய நாள் எழும் போதே மணி பத்து ! கலையவில்லை இன்னும் தூக்கத்தின் பித்து ! வாவ் ! இன்று விடுமுறை ! ஆகஸ்ட் பதினைந்து ! போகத்தேவையில்லை ஆலை ! செய்யத் தேவையில்லை வேலை ! நான்குநாள் தாடியை முதலில் சிரைக்க வேண்டும் ! அழுக்குகளைத் தண்ணீரில் நுரைக்க வேண்டும் ! காதலியிடம் அரைத்த மாவையே மீண்டும் கொஞ்சம் அரைக்க வேண்டும் ! மாலையில் மதுவருந்துவது பற்றி நண்பனிடம் உரைக்க வேண்டும் ! நினைத்த படியே மீண்டும் தூக்கத்தில் விழுந்தேன் ! பத்து நிமிடத்தில் பதறியடித்து மீண்டும் எழுந்தேன் ! எண்ணிய யாவையும் எண்ணியாங்கு முடித்து கலைக்காட்சி பார்க்கலாமென்று தொலைகாட்சி போட்டேன் ! அதில் எவனோ படுத்துக் கொண்டே கில்லியடித்தான் ! எதிரிகளை விரட்டி விரட்டி சொல்லியடித்தான் ! அப்புறம், உள்ளாடை மட்டுமணிந்த வளரும் நடிகையைக் காட்டினார்கள் ! அவள் வாயாலேயே ஆங்கிலத்தில் நாட்டுப்பற்றை ஊட்டினார்கள் ! அதன் பின் மதியம், உணவகம் ! பதார்த்தப் பட்டியலைப் பார்வையால் ஆய்ந்தேன் ! ஆடு,...
உழைப்பு                               வாழ்க்கையே வெறுத்து விட்டது ! உழைத்து உழைத்தே உடம்பு, சிறுத்து விட்டது ! காலையிலேயே கல்லொன்று காலைத் தடுக்கியது ! ' போகாதே ' என்று புத்திமதியை மண்டைக்குள் முடுக்கியது ! அப்போதே கணித்திருக்க வேண்டும் ! போகவேண்டாமென பாழும் மனதைப் பணித்திருக்க வேண்டும் ! கஷ்ட காலம் ! பிசகிவிட்டது ! சொந்தக்காரன் செத்துவிட்டான் என்று, அன்று சக ஊழியன் வரவில்லை ! அது, அடிக்கடி அவன் சொல்லும் சாக்கு ! அவனைப் பொருத்தமட்டில் நான் ஒரு பேக்கு ! மேலதிகாரி, வேலை எனும் கல்லில் போட்டு துவைத்து விட்டான் ! உட்கார்ந்தபடியே உள்ளிருக்கும் உதிரத்தை சுவைத்து விட்டான் ! முன்மண்டையில் முடியில்லாத எவனோ மேலிடத்திலிருந்து வருகிறானாம் ! அனைத்தையும் ஆய்ந்து ' நலமே'  என்று சான்றிதழ் தருகிறானாம் ! அதற்கு நானா அகப்பட்டேன் ? ம்ஹ்ம் ! இந்த வேலையில் எங்கே நான் சுகப்பட்டேன் ? ஸ்ஸ்ஸ...
இரவுப்பணி கண்ணெல்லாம் எரிகிறது ! மண்டைக்குள் நரகக்காட்சி தெரிகிறது ! பகலெல்லாம் படுத்தே கிடந்தாலும் வருவதென்னவோ பாதியுறக்கம் தான் ! முந்தின நாள் பணி தின்று தீர்த்த மீதியுறக்கம் தான் ! இரவெல்லாம் தூக்கம் துரத்தத் துரத்த ஓடவேண்டியிருக்கிறது ! நடுநடுவே எங்கிருக்கிறோமென நம்மைநாமே தேடவேண்டியிருக்கிறது ! எவ்வளவு முயன்றும் முடியாமல் சொக்கி சொக்கி விழுகின்றன அதிகாலை விழிகள் ! பணி முடிந்து திரும்புகையில் மெல்ல மெல்ல அடைபடுகின்றன உறக்கம் வரும் வழிகள் ! அதிலும், பிரம்மச்சரிய அறை வாழ்க்கையென்றால் அது இன்னும் மோசம் ! புறவுலகம் மறக்கும் எத்தனிப்பில் புழுப்போல நெளிந்து நெளிந்தே சக்தியெல்லாம் வடிந்து சற்றே கண்ணயரும் வேளையில் அறை நண்பன் அலைபேசி இரக்கமில்லாமல் அதிர ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்சநஞ்ச உறக்கமும் ஒட்டுமொத்தமாய் உதிர, பிறகு நிகழ்வதெல்லாம் பகலென்னும் பிரம்மாண்ட வெம்மையில் மீண்டும் புழுவாகித் துடித்தல் மட்டுமே ! உள்ளிருதே பற்றியெரியும் உறக்கத்தின் நெருப்பை தண்ணீர் ஊற்றி தற்காலி...
வாழ்க தேசியம் ! ஓங்குக நாட்டுப்பற்று ! தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது ஒரு சர்வதேசப் போட்டி ! நான் , பார்த்துக் கொண்டிருந்தேன் ஒய்யாரமாகக் கால்களை நீட்டி ! அங்கே, அரையுங்குறையுமாய் இரு பெண்கள் வந்தாடினார்கள் ! வியர்க்க வியர்க்க ஓடி ஓடி பந்தாடினார்கள் ! இருவரில் ஒருத்தி என் தாய்நாட்டுக்காரி ! இன்னொருத்தி, வேறு எதோ பேய்நாட்டுக்காரி  ! நான், மந்திரித்து விட்டது போல முந்திரி தின்றுகொண்டே சுந்தரிகளை சுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்தேன் ! ங்கொக்கமக்கா ! வாங்கியே ஆகவேண்டும் தங்கம் ! இல்லையெனில், அது தாய்நாட்டுக்கே பங்கம் ! சுந்தரிகள் இருவருமே நெருங்கி வந்தனர் வெற்றியை ! அநியாயத்துக்கு நெளிய வைத்தனர்  - என் நெற்றியை ! அடியேன், தொலைக்காட்சியிலேயே கண்களை சிறையிட்டேன் ! எல்லா கடவுளிடமும் வஞ்சனையில்லாமல் முறையிட்டேன் ! இறுதியில், தாய்நாட்டுக்காரி தங்கம் வென்றெடுத்தாள் ! தலைகால் புரியாமல் கத்தினேன் ! கையை மடக்கிக் காற்றில் குத்தினேன் ! உய் உய் உய் உய் ! வாய்நோக அடித்தேன் சீட்டி ! ஏமாற்றாமல் எதிர்...
தேடல் -  சிறுகதை  அந்த இடம் மிக அமைதியாக இருந்தது . ம்கும் என்று தொண்டையை இலேசாக செருமினால் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் இருப்பவன் திருபிப்பார்க்கிறான் என்றால் அந்த அமைதி என்னவென்று கணித்துக் கொள்ளுங்கள் . நான் அவ்விடத்தில் என்னை அந்நியனாக உணர்ந்தேன் . வந்திருக்க வேண்டாமோ ? எனக்கு முன்னால் தோட்டம் துரவுமாக இருந்தது . ஒருவன் , காவி அணிந்து குடுமி வைத்துக் கொண்டு செடிகளுக்கு நீர் பாய்ச்சினான் . ஒருவன் ! இங்கேயும் ஆண் ! எங்கேயும் ஆண் ! கொல்ல வேண்டும் அவனை , அவர்களை , ஆண்களை ! பின் குறிப்பு : நானும் ஒரு ஆண் !   அதில் பாருங்கள் ஒரு ஆணாக இருந்து கொண்டு ஆண்களை வெறுப்பதற்குக் காரணங்கள் மிக எளியவை . முதலில் எனக்குத் திருமணம் ஆகவில்லை , காதலி என்று எந்த எவளும் கிடைக்கவில்லை , பணிபுரியும் இடத்தில் பெண்கள் இல்லை , பக்கத்து வீட்டில் பல் போன ஆயா மட்டுமே , தெருவில் நடந்தால் எதிரே தென்படுபவர்கள் ஆண்கள் தான் , அவர்களும்  காறித் துப்புகிறார்கள் . பெண்களே இல்லாத திரையரங்குகள் , ...