இன்றுதான் கவனித்தேன் பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவிலருகே தள்ளுவண்டியில் டிபன் விற்கும் அந்த இளைஞனின் மார்புக்கு மத்தியில் பிரபாகரன் சிரித்துக் கொண்டிருந்தார் அவர் உயிரோடிருக்கிறார் என்று தெரியும் ஆனால் எங்கிருக்கிறார் என்ற எனது நீண்டநாள் கேள்விக்கு இன்று விடைகிடைத்தது
எங்கள் ஞாயிற்றுக் கிழமை மதிய பசியிருட்டுக்கு வெள்ளாட்டுக்கறிக்குழம்பு என்றொரு விளக்கு நாட்டுகோழி வறுவல் என்றொரு விளக்கு ரத்தப் பொரியல் என்றொரு விளக்கு முட்டைப் பொடிமாஸ் என்றொரு விளக்கு என அம்மா ஏற்றிவைத்திருந்த அத்தனை விளக்குகளையும் நொடிப்பொழுதில் ஊதியணைத்தது குழம்பில் உப்புக்குறைவு என்று தட்டை விசிறியடித்த அப்பாவின் கோபம்