Skip to main content

Posts

தங்கை தாயானவள் சமையலில் ஈடுபட்டிருக்க , மூன்று வயதுச் சிறுவனாய் திண்ணையில் நான் தனித்திருக்கையில் , தத்தித் தத்தித் தவழ்ந்து வந்து தோளைப்பிடித்து எழுந்து நின்று என் தலை முடி கலைத்தவள் என் தங்கை ! புத்தகப்பை சுமந்து நான் பள்ளி செல்வதைப் பார்த்துவிட்டுத் தானும் உடன் வருவேன் என அழுது அடம் பிடித்தவள் என் தங்கை ! முதன் முதலாக மிதிவண்டி பழகும்போது குரங்குப்பெடலில் குரங்கு சேட்டை செய்ததில் , கீழே விழுந்து காயம்பட்டு நான் கதறியழுவதைக் கண்டு அழுதுகொண்டே ஓடிப்போய் அம்மாவை அழைத்து வந்தவள் என் தங்கை ! தீபாவளிக்கு என் பங்கு பட்டாசுகளை வேகமாய் வெடித்து விட்டு வெடிப்பவர்களை வெறுமனே வேடிக்கை பார்ப்பேனென்று தன் பங்கிலிருந்து எனக்காக ஒரு பங்கை எப்போதும் எடுத்து வைப்பவள் என் தங்கை ! அஞ்சாங் கல் விளையாட்டில் எப்போதும் ஜெயித்தாலும் எனக்காவே தோற்பவள் என் தங்கை ! தந்தை தனக்காக வாங்கிவரும் தின்பண்டத்தை தான் மட்டும் உண்ணாமல் அண்...
கடற்கரைக் காட்சிகள் உப்புக் கரிக்கும் குற்றவுணர்ச்சியில் , ஓயாமல் ஓடிவந்து காலைத்தொட்டு மன்னிப்புக் கேட்டது கடல் அலை ! அன்புத்தாயின் கைச்சிறைக்குள் கைதாகியிருந்த கைக்குழந்தை ஒன்று கைநீட்டிக் கைநீட்டிக் கடலை அழைத்தது ! அன்பின் தாகத்திற்கு அண்ணாந்து பார்த்து ஆகாயம் பருகியபடி அமர்ந்திருந்தார் அறுபது முதியவர் ! மனதை மட்டும் அவிழ்த்துக் கொண்டு கண்களால் மட்டும் தழுவிக்கொண்டு காதல் காத்து , கண்ணியம் வளர்த்தது காதல் ஜோடி ஒன்று ! பட்டம் விடுவதில் பட்டம் பெற்றான் பள்ளிச்சிறுவன் ! தொலைந்த பலூனுக்காய்த் துள்ளி அழுதாள் தளிர்ச் சிறுமி ! தோழி ஒருத்தியிடம் தோழன் ஒருவன் , தயங்கித் தயங்கித் தன்னுள்ளம் திறந்து தன்னிதயம் தந்தான் ! வேலையில்லா வாலிபன் மணலை , கைகளால் அளந்து கடலை கண்களால் அளந்தான் ! முழுக்க நனைந்தும் மறைக்கத் தோன்றாத விளையாட்டு வாலிபிகளை விடாமல் நோக்கின விரசக் கண்கள் ! கற்பனை வறண்ட கவிஞன் ஒருவன் ச...
வாலிபா ......... கண்களைத் திற , கதவுகள் உனக்குத் தட்டுப்படும் ! நம்பிக்கை கொள் , தோல்வியின் துயரம் மட்டுப்படும் ! விடாமல் முயல் , வெற்றிகள் உனக்குக் கட்டுப்படும் ! உன் ஆணவக் கொம்பு ஓடியட்டும் ! தன்னலப்பேய் மடியட்டும் ! தோல்வியின் அத்தியாயம் முடியட்டும் ! தூற்றுபவன் மீது பற்றுக்கொள் ! வசைகளை விரும்பிப் பெற்றுக்கொள் ! தோல்வியில் பாடம் கற்றுக்கொள் ! பாதைகள் தெரிந்தால் முந்திவிடு ! போதையைக் கண்டால் பிந்தி விடு ! வாலிபத்தின் விசையை உந்திவிடு ! வெற்றியின் எல்லைகள் உனது ஆட்சியாகட்டும் ! உனது சரித்திரம் வருங்காலத்தில் காட்சியாகட்டும் ! உனது உதிரமும் வியர்வையும் அதற்கொரு சாட்சியாகட்டும் ! பழைய இருட்டை மற ! புதிய வானத்தில் பற ! நாளை என்ற நினைப்பை நாளும் நீ துற ! உன் முயற்சியின் அணையில் வரத்து ஏறட்டும் ! உழைப்பின் வலிகள் மரத்துப் போகட்டும் ! உரிமையின் குரல் உரத்துக் கேட்கட்டும் ! சூட்சமம் புரிவதில் மந்திரனாய் இரு ! சூழ்ச்...
அப்பா தாய்ப்பால் உண்ட உற்சாகத்தில் தொட்டிலுக்குள்ளே நான் துள்ளிக் கொண்டிருக்கும் போது ஆசையோடு எட்டிப்பார்க்கும் மீசை மனிதராய் எனக்கு அறிமுகமானவர் நீங்கள் ! வளரும் பிராயத்தில் நான் உங்களைப்போலவே நடப்பதாகவும் உங்களைப்போலவே பேசுவதாகவும் ஊர் உலகம் சொல்லும்போதெல்லாம் பெருமையோடு நீங்கள் புன்னகை சிந்துவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன் ! அம்மா எனக்கு நிலவை ரசிக்கக் கற்றுத்தந்தாள் ! நீங்கள் எனக்கு சூரியனை வணங்கக் கற்றுத்தந்தீர்கள் ! மிதிவண்டியின் பின்புறம் என்னை அமர்த்திக்கொண்டு ஒரு அரசனைப் போல நீங்கள் நகர்வலம் செல்லும்போது , வழிநெடுக எனக்கு வாழ்க்கைப் பாடம் போதிப்பீர்கள் ! ஒரு நாள் காலையில் ஆறு பார்க்கப் போவேனென்று அழுது நான் அடம் பிடிக்க அழைத்துப் போனீர்கள் ! அங்கே , ஆற்று வெள்ளத்தின் போக்கு புரியாமல் எதோ ஒரு பள்ளத்தில் காலை விட்டு , நீருக்குள் மூழ்கி மூச்சடைத்தேன் நான் ! ஆனாலும் நீங்கள் உடனிருக்கும் தைரியத்தில் எதிரே வந்த ...