Skip to main content

Posts

விட்டமில்லாத வட்டம் கல் உடைச்ச களைப்பை எல்லாம் கள் குடிச்சு போக்கிக்கிறோம் ! தேகத்தோட தாகத்த மதுவருந்தி மாய்ச்சுக்கிறோம் ! வீடு விட்டு வெளிய போய் பாடுபடும் பொஞ்சாதி ! பள்ளி சுமந்த புள்ளைங்க சுள்ளி சுமக்கப் போகுதுங்க ! வெய்யில்ல நாங்க வெந்தாத்தான் வீட்டு அடுப்புல விறகெரியும் ! உசுரக் குடுத்து உழைச்சாத் தான் அரிசிப்பானையில உலை கொதிக்கும் ! கொஞ்சூண்டு சோறிருந்தா பசிய நாங்க நெஞ்சுண்டு ஆத்திக்கிறோம் ! போர்வையும் கிழிஞ்சிருந்தா அன்பைக்கொண்டு போர்த்திகிறோம் ! நாட்டு நடப்பைஎல்லாம் ஏட்டுல தெரிஞ்சுக்க எங்களுக்கில்ல ஏட்டறிவு ! பட்ட பாட்டையெல்லாம் பாட்டுல சொல்ல போதுமிந்த பட்டறிவு ! ஏதோ தேர்தலாம் . அணிபிரிஞ்ச மோதலாம் ! நோட்டுக்கு ஓட்டாம் ! ஓட்டுக்கு நோட்டாம் ! அதெல்லாம் யாருகண்டா ? ஒருத்தன் இன்னொருத்தனை நாராக்கிழிச்சு தோரணம் கட்டித் தொங்க விட்டான் ! இன்னொருத்தன் மற்றொருத்தனை ஈரம் புழிஞ்சு சாயம் போகக் காயப் போட்டான் ! ...
ஆகையால் நிறுத்தி விடு வாழ்க்கையின் யுத்தத்தில் , இளமையின் சத்தத்தில் , ஆசையின் முத்தத்தில் , தேகத்தின் பித்தத்தை - நீ தேடிப்போனால் - உன் நாடி ஓட்டம் அடங்கிப்போகும் . உதிரத்தின் ஊட்டம் ஒடுங்கிப்போகும் ! ஊரு விட்டு ஊரு வந்து சொந்த பந்தம் அறுந்து வந்து , தாய்ப்பாசம் மறந்து வந்து , தந்தை நேசம் துறந்து வந்து , ரத்தத்தை வித்து நித்தமும் செத்து , பாடுபட்டு சேர்த்த காசை பாழுங்கிணற்றில் போடாதே - நீ பாதை மாறிப் போகாதே ! பாதைகள் புரியாமல் , போதையில் தெரியாமல் வீதியில் நீ விழுந்தால் நாதிஎன்று யாருமில்லை சாதிசனம் கூட இல்லை ! பிழைப்பைத் தேடி வந்தவனே உழைப்பில் வாடி வெந்தவனே ! உன் கைகளில் இருப்பதெல்லாம் வியர்வையின் முத்துக்கள் ! சட்டைப்பைகளில் இருப்பதெல்லாம் உன் உதிரத்தின் சொத்துக்கள் ! அவற்றை , பிறர் பிச்சைக்காக நீ கொடுத்தால் மனம் உவந்து வாழ்த்தப்படுவாய் ! உன் இச்சைக்காக நீ எடுத்தால் மானம் இழந்து தாழ்த்தப்படுவாய் ! உண்மையான காதல் என்பது வ...
நிலாச்சோறு எனக்குப் பிறந்த தாய் நீ ! உன்னைப் பெற்ற மகன் நான் ! உலகக்கதைகளைப் பேசியபடியே நாம் மொட்டைமாடியில் ஒன்றாக உணவருந்துவோம் ! உன் அம்மாவிடம் மட்டுமல்ல இந்த அப்பனிடமும் நிலாச்சோறு சாப்பிட்டவள் நீ ! ஞாயிறு காலையில் நீயும் நானும் நடைபாதையில் நடை பயில்வோம் . நமக்கு எதிரில் சில இளை ஞ ர்களும் வருவார்கள் . நான் நாகரீகம் கருதி உன்னை விட்டு சற்று முன்னாள் நடப்பேன் . நீயோ , கன்றுக் குட்டிபோல என் கைகளைப் பிடிவாதமாகப் பற்றிக்கொண்டு என்னோடு எதோ பேசியபடி கூடவே வருவாய் ! எனக்குள் இருந்த தாய்மையை நானே உணர்ந்து சிலிர்த்த கணங்கள் அவை ! அன்பு மிகுதியானால் நான் உன்னை அம்மா என்று தான் அழைப்பேன் நீயோ உரிமையோடு ஒருமையில் அழைப்பாய் ! ஒரு முறை பள்ளிச் சுற்றுலா என பத்து நாட்கள் நான் உன்னைப் பிரிந்திருக்க நேர்ந்தது . நீ புறப்படும் முன் உனக்குப் பிடிக்கும் ஆப்பிள்பழங்களும் நீ படிக்கும் ஆனந்த விகடனும் குளிரை விரட்ட கம...
தடயம் தொடர்ச்சி ......................... ஆனால் சத்தியமாக கொலை செய்யும் அளவுக்குப் போவேனென்று நான்அரைத்தூக்கத்தில் கூட நினைத்திருக்க மாட்டேன் . ஒரு பெண் ஒரு ஆணை எந்தஅளவுக்குத் தயார் படுத்துகிறாள் என்று பாருங்கள் . எப்படி இருந்த நான்இப்படி ஆகிவிட்டேன் . ஆனாலும் இதிலிருந்து பின் வாங்குவதென்பது இனிமேலும்என்னால் முடியாது . சுமலதாவின் கணவனைக் கொன்றால் என்ன ஆகும் ? முதலில்போலீஸ் . அவர்கள் கண்களில் ஆச்சி குழம்பு மிளகாப் பொடியைத் தூவிவிட்டுஅந்தாளைப் போட்டுத்தள்ளுகிறேன் என்று வைத்துக் கொள்வோம் . பிறகு ?சுமலதாவின் சொக்கவைக்கும் உடம்பிற்கு நானே ஏக போக உரிமையாளன் . உடம்பாஅது . சொர்க்கத்தின் கிடங்கு . அடுத்ததாக அவளின் மாளிகை போன்ற வீடு .வங்கி இருப்பு . வரக்கூடிய தொகைகள் . யாவையும் எனக்கே எனக்கு . ஆனால் ஒருஇடத்தில் உதைத்தது . சுமலதாவின் குழந்தைகள் . ஒ ஷிட் ! அவர்கள் தேவைஇல்லாத சுமைகள் . தற்போது எங்கோ வெளியூரில் தங்கிப் படித்து வருகிறார்கள். அவர்களிடம் சுமலதா என்னை என்ன சொல்லி அறிமுகப் படுத்துவாள் ?நினைக்காதே ரங்கநாதா ! அதையெல்லாம் நினைத்தால் நீ மீண்டும் பழையவாழ்க்கைக்கே திரும்ப வேண்டும் . பெ...